லோக்சபா தேர்தலோடு.. தமிழகத்தின் 2 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? வெளியாகப்போகும் அறிவிப்பு
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழ்நாட்டில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த தொகுதிகள் என்ன? எதற்காக இடைத்தேர்தல் நடைபெற உள்ளது? என்பது பற்றிய விபரம் வருமாறு:
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. வரும் 15ம் தேதிக்குள் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் 7 கட்டங்களாக இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வில் மும்முரம் காட்டி வருகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி லோக்சபா தேர்தலில் நிலவ உள்ளது. இத்தகைய சூழலில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுடன் 2 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதில் முதல் தொகுதி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதி. இந்த தொகுதியின் எம்எல்ஏவாக விஜயதாரணி இருந்தார். இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி தற்போது காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 2 தொகுதி என்பது திருக்கோவிலூர் சட்டசபை தொகுதியாகும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தொகுதியில் எம்எல்ஏவாக திமுகவின் பொன்முடி இருந்தார். முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். இந்நிலையில் தான் சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் எம்எல்ஏ பதவியை இழந்துள்ளார். இதனை எதிர்த்து பொன்முடி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே தான் இன்று திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சட்டசபை தொகுதியின் எம்எல்ஏ, நாடாளுமன்ற தொகுதியின் எம்பி ஆகியோர் ராஜினாமா செய்தாலோ அல்லது அவர்களின் பதவி பறிக்கப்பட்டாலோ அந்த தொகுதிக்கு அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாட்டில் விளவங்கோடு, திருக்கோவிலூர் சட்டசபை தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அந்த வகையில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. அந்த சமயத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு, திருக்கோவிலூர் சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications