தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4500 ஆக சரிவு.. கோவை, மதுரையில் உயிரிழப்பு அதிகரிப்பு
சென்னை : தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 4512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் கொரோனாவால் 118 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 6,013 பேர் மீண்டுள்ளனர்.
கொரோனாவின் தமிழகத்தில் இரண்டாவது அலை வெகுவாக குறைந்துவிட்டது. கடந்த மே மாதம் இரண்டாவது வாரத்தில் 36 ஆயிரம் என்கிற அளவில் இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது 4500 என்கிற அளவிறகு குறைந்துள்ளது.
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 4,512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,75,190 ஆக உயர்ந்துள்ளது.

மொத்த பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 6,013 பேர் மீண்டுள்ளனர். இதனால் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 24,03,349 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 39,335 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கோவையில் 12 பேர் பலி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக கோவை மற்றும் மதுரையில் தலா 12 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். சேலத்தில் 9 பேரும், சென்னை, ராணிப்பேட்டை, வேலூரில் தலா 7 பேர் பலியாகி உள்ளனர். செங்கல்பட்டில் 6 பேர் பலியாகி உளளனர்.

ஈரோட்டிலும் உயர்வு
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கோவையில் 563 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோட்டில் 493 பேரும், சேலத்தில் 302 பேரும், திருப்பூரில் 281 பேரும், சென்னையில் 275 பேரும், தஞ்சாவூரில் 215 பேரும், செங்கல்பட்டில் 229 பேரும், திருச்சியில் 170 பேரும், நாமக்கல்லில் 173 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை முதலிடம்
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்புடன் 39,335 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். அதிகபட்சமாக கோவையில் 4676 பேரும், ஈரோட்டில் 4163 பேரும், சென்னையில் 3307 பேரும், சேலத்தில் 2021
பேரும், செங்கல்பட்டில் 2191
பேரும், தஞ்சாவூரில் 1992 பேரும், திருப்பூரில் 1722 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications