முதல் நாளே சட்டசபையில் குழப்பம்.. கவர்னர் வெளியேறிய சில நிமிடங்களில்.. அதிமுக, பாஜக வெளிநடப்பு!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், இன்று ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார். இதற்கிடையே அதிமுகவினரும் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மோசமாக இருப்பதாகச் சொல்லி கோஷம் எழுப்பினர். மேலும், அவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பும் செய்தனர்.
தமிழ்நாடு சட்டசபை இன்றைய தினம் காலை கூடியது. ஆளுநருக்கு மரபுப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பிக்க வேண்டும்.

இருப்பினும், ஆளுநர் இந்தாண்டும் தனது உரையை வாசிக்கவில்லை. தமிழ் தாய் வாழ்த்தோடு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், தேதிய கீதம் பாடப்படவில்லை எனச் சொல்லி ஆளுநர் உரையை வாசிக்காமலேயே கவர்னர் ரவி வெளியேறினார். அதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். மக்கள் சபையை ஆளுநர் அவமதித்துள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு என அண்ணா கூறியிருந்தார். ஆளுநர் ஏற்கனவே நடந்து கொண்டதைப் போல இப்போது மீண்டும் நடந்து கொண்டுள்ளார். அரசமைப்பை ஆளுநர் மீறியுள்ளார். உரையை வாசிக்காமல் ஆளுநர் சென்றதைச் சட்டப்பேரவை ஏற்கவில்லை. மக்கள் சபையை ஆளுநர் அவமதித்துள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், ஆளுநர் உரையோடு அவை தொடங்க வேண்டும் என்ற பேரவை விதியை அரசமைப்பில் திருத்த முயல்வோம் என்றும் பேரவை விதியை அரசமைப்பில் திருத்தும் வகையில் திமுக நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பான அரசமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர பிற மாநிலக் கட்சிகளோடு சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஆளுநர் உரை பேசியதாகக் கருதி நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் மசோதாவை முன்மொழிந்தார். அந்த மசோதா ஏற்கப்பட்டது. அப்போது அதிமுகவினர் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மோசமாக இருப்பதாகச் சொல்லி கோஷம் எழுப்பினர். அதிமுகவினரை அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தினார். இருப்பினும், அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என சபாநாயகர் அப்பாவு கூறிய நிலையில், அதிமுகவினர் அவையில் இருந்து வெளியேறினர். மேலும், அவை வளாகத்தில் அமளியிலும் ஈடுபட்டனர்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications