Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 17/02/2026: திருமாவளவன் டூ கிரிஷ் சோடங்கர் வரை! தலைவர்களின் நச் கருத்துகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் (Tamil Nadu Assembly Election 2026) இரு மாதங்களில் நடக்க இருக்கும் சூழலில், அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் பேச்சுகள், கருத்து மோதல்கள் என இப்போதே அரசியல் களம் அனல் பறக்க தொடங்கி விட்டது. தமிழக அரசியல் களத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கவனம் பெற்ற டாப் 10 தலைவர்களின் கருத்துகளை இங்கே சுருக்கமாக காணலாம்.

இன்றைய டாப் 10 பேச்சுக்கள் (17/02/2026) தலைவர்களின் நச் கருத்துக்கள் நறுக்கென்று உங்கள் பார்வைக்கு..

Tamil Nadu Assembly Election 2026 Top 10 Political Statements thirumavalavan to krish chodankar

முதல்வர் ஸ்டாலின்

"இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்" என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் தங்கம் தென்னரசு..

ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம்! ஜூலை மாதம் திராவிட மாடல் 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம்!

திருமாவளவன்

பாஜக என்ன சூழ்ச்சி, சதித் திட்டங்கள் தீட்டினாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. காங்கிரஸில் சிலர் கூறும் சொந்த கருத்துகளை பொருட்படுத்த தேவையில்லை

தங்கம் தென்னரசு

மத்திய அரசின் நிபந்தனைகளால் தமிழகத்திற்கு ரூ 15 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகிறது. தமிழகத்திற்கு செயற்கையாக நெருக்கடி தர மத்திய அரசு முயற்சிக்கிறது. மத்திய அரசு பொறுப்பு ஏற்றுள்ல திட்டங்களுக்கு உரிய நிதியை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.

அண்ணாமலை

கடைசி பட்ஜெட்டிலும் ஏமாற்றுவதை கைவிடவில்லை. திமுகவினர் ஒட்டிய முட்டை போஸ்டருக்கு இன்று அர்த்தம் புரிந்துள்ளது. தமிழக பட்ஜெட் வெறும் சுய புராணமாகவே உள்ளது. திமுக வாங்கிய மொத்த கடன் தொகை மார்ச் 31-இல்ரூ.10,62,248 கோடியாக இருக்கும் என்று கூறியுள்ளார்கள்.

கேசி வேணுகோபால்

புதுவையில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி தான் அமைய உள்ளது. மக்களை ஏமாற்றிய என்.ஆர் காங்கிரஸ் அரசை கண்டிப்பாக மக்கள் ஏமாற்றுவார்கள். புதுவையில் கடந்த 5 ஆண்டுகளில் உருப்படியாக ஒரு திட்டம் கூட நிறைவேற்றப்படவில்லை.

ஜிகே வாசன்

கூடுதல் இடங்களை கேட்பது இயல்பு தான். நான் அட்சி நடத்துகிறேன். மடம் நடத்தவிலை. எனக்கு மீண்டும் மாநிலங்களவை பதவி வேண்டாம். இந்த முறை அதிக சட்டமன்ற தொகுதிகளை கேட்பேன். திமுக காங்கிரஸ் கூட்டணி ஒரு பொருந்தா கூட்டணி.

வைகோ

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் தேர்தல் முடிவு இருக்கும். காங்கிரஸ் தலைவர்கள் சில கருத்துகளை சொல்வார்கள். அதை பெரிதுபடுத்த வேண்டும். மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை கொடுத்தது அதிமுக தான் என்பது தவறு.. திமுக காங்கிரஸ் இணைந்து தான் தேர்தலை சந்திக்கும்.

ஸ்டெர்லைட் எனும் நச்சு பூதம் வேறு வடிவத்தில் தூத்துக்குடியில் நரி தந்திரத்துடன் நுழைய முயற்சிக்கிறது. இந்த ஆலையை அடியோடு அகற்றுமாறு தமிழக அரசை வேண்டுகிறேன்.

மாணிக்கம் தாகூர்

கார்கே, ராகுலை விட நான் பெரிய ஆளா என செல்வப்பெருந்தகை கேட்டது அண்ணனுக்கும் தம்பிக்கும் உள்ள பிரச்சினை. இதை நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம்.

எம்பி விஷ்ணுபிரசாத்

கூட்டணி ஆட்சி குறித்து மாணிக்கம் தாகூர் பேசியது அவரது சொந்த கருத்து. கூட்டணி குறித்து பொதுவெளியில் எந்த கருத்தும் கூற கூடாது என காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

விஜய் வசந்த் எம்பி

"பாஜக தலைவர்களை கட்டுப்படுத்துமாறு தமிழிசையிடம் சொல்லுங்கள்; எங்கள் தலைவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்"

கிரிஷ் சோடங்கர்

கூட்டணி கட்சியிடம் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் திமுகவுடன் பேசி, அறிக்கையாக காங்கிரஸ் தலைமையிடம் கொடுப்பவர். பின்னர் காங்கிரஸ் தலைமை உரிய முடிவை எடுக்கும். அதுவரை கூட்டணி குறித்து பொதுவெளியில் யாரும் பேசக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+