Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த சட்டசபை தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடமும் அதிகரித்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை விரைவில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்து வரும் திமுக தலைமையிலான அரசின் பதவிக்காலம் வரும் மே மாதம் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் புதிய சட்டசபையை அமைக்க தேர்தலை நடத்துவது அவசியமாகியுள்ளது.

இதேபோல் நாட்டின் பிற மாநிலங்களிலும் அரசுகளின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் இருப்பதால், ஒரே கட்டமாக தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தமிழகத்துடன் சேர்த்து மொத்தம் ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

Tamil Nadu Assembly Election 2026 Election Commission Tamil Nadu

தமிழ்நாடு சட்டசபை தேர்தல்

தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம்,அசாம் மற்றும் கேரளாவில் என மொத்தமாக ஐந்து மாநிலங்களிலும் 824 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 234 தொகுதிகள் உள்ளன. இந்த அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் நேரடியாக சென்று ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர்.

இந்திய தேர்தல் ஆணையம்

அந்த வகையில் கடந்த மாத இறுதியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை வந்து மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான அர்ச்சனா பட்நாயக் உடன் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. வாக்குச்சாவடிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் தலைமை தேர்தல் ஆணையர் சந்தித்து அவர்களது கருத்துகளையும் கேட்டறிந்தார்.

தேர்தல் தேதி எப்போது?

தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் கவனத்தில் கொண்டு இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. அரசியல் கட்சிகளும் தேர்தலை முன்னிட்டு தங்கள் பணிகளை தொடங்கி உள்ளன. இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் திருச்சியில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

மோடி பொதுக்கூட்டம்

திருச்சி நகரில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல முக்கிய அரசியல் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் தனது பயணத்தை முடித்து டெல்லி திரும்பிய பிறகு ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. குறிப்பாக வரும் 15-ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்தல் தேதி

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வரும். இதனால் அரசியல் கட்சிகளின் பிரச்சார நடவடிக்கைகள் மற்றும் அரசு அறிவிப்புகள் அனைத்தும் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெற வேண்டிய நிலை ஏற்படும். தமிழகத்தைப் பொருத்தவரை வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி நடைபெற வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து 234 சட்டசபை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

தமிழக தேர்தல் எப்போது

தேர்தல் முடிந்த பிறகு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு புதிய அரசு அமைக்கப்படும். தற்போதைய திமுக அரசின் பதவிக்காலம் மே 10-ஆம் தேதி முடிவடைவதால், அதற்கு முன்பாக புதிய சட்டசபை அமைக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் வரும் நாட்களில் தமிழக அரசியல் மேலும் சூடுபிடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+