ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி
சென்னை: 2026 சட்டசபை தேர்தலில் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. 164 தொகுதிகளில் திமுக நேரடியாகவும் 11 தொகுதிகளில் திமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கிட்டத்தட்ட கூட்டணி காட்சிகளை சமாளித்து, பல கட்சிகளுக்கு குறைவாக சீட் கொடுத்து, ஒருவழியாக கூட்டணி பேச்சுவார்த்தைகளை திமுக முடித்துள்ளது.
தமிழ்நாடு சட்ட மேலவை திட்டத்தை மனதில் வைத்தே ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் வழங்கியதாக கூறப்படுகிறது. திமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கான சீட் எண்ணிக்கை, தொகுதிகளை அடையாளம் காண்பது உள்ளிட்ட பிரச்சனைகளில் திமுக தலைமை சீரியஸ் காட்டி வரும் அதே வேளையில், திமுகவில் சீனியர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்வதில் முதல்வர் ஸ்டாலினுக்கு சில யோசனைகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இது குறித்து ஓய்வு பெற்ற திமுக ஆதரவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சர்வீசில் இருக்கும் உயரதிகாரிகள், திமுக ஆதரவு இண்ட்லெக்சுவல்கள், சபரீசன் உள்ளிட்டவர்களிடம் 2026 தேர்தல் தொடர்பாக அவ்வப்போது தனித்தனியாக ஆலோசித்து வருகிறார் ஸ்டாலின்.
அந்த ஆலோசனைகளில், ''இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் கொடுக்கலாம்.. திமுகவின் சீனியர்கள் பலருக்கும் போட்டியிட வாய்ப்புத் தர வேண்டாம். அவர்களை கட்சி பணிக்கு அனுப்பலாம். தேர்தல் முடிவு களுக்கு பிறகு அவர்களை எப்படி, எந்த வகையில் பயன்படுத்துவது என்பது குறித்து விவாதிக்கலாம் '' என்று ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பல சீனியர்களுக்கு சீட்டு வேண்டாம் - ஸ்டாலின்
தேர்தல் பணிகளை முன்னெடுக்க முடியாமல் இருக்கும் சீனியர்கள், தொகுதியில் அதிருப்தியை சம்பாதித்துள்ள சீனியர்கள் என சிலருக்கு சீட் தர வேண்டாம் என்பதில் ஸ்டாலினுக்கும் ஏற்புடையதாக இருக்கிறது. இதற்காக, உளவுத்துறையிடமும், திமுக வின் தேர்தல் வியூக அமைப்பான பென் நிறுவனத்தின் தலைவர் சபரீசனிடமும் ரிப்போர்ட் கேட்டிருந்தார் ஸ்டாலின்.
அண்மையில் சீனியர்கள் தொடர்பான தங்களின் ரிப்போர்ட்டுகளை உளவுத் துறையும், பென் நிறுவனமும் கொடுத்துள்ளன. அதில் முக்கிய சீனியர்கள் பலர் மீது நெகட்டிவ் ரிப்போர்ட் தாக்கலாகியிருக்கிறது. அதனடிப்படையில் சீனியர்களுக்கு எதிராக கடினமான முடிவுகளை ஸ்டாலின் எடுக்கவிருப்பதாக திமுக தரப்பில் பரவி யுள்ளது.
சீனியர்கள் பலர் மீது நெகட்டிவ் ரிப்போர்ட்
இதுகுறித்து திமுக தரப்பிலும் உளவுத்துறை வட்டாரங்களிலும் விசாரித்த போது, ''திமுக அரசு மீதும், தலைவர் ஸ்டாலின் மீது மக்களிடம் எந்தவிதமான அதிருப்தியும் இல்லையென்றாலும், திமுகவின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் மீது அதிருப்தி இருக்கத்தான் செய்கிறது. அவர்களின் தொகுதியில் எடுக்கப்பட்ட சர்வேக்கள் அதைத் தான் சொல்கின்றன. மீண்டும் முதலமைச்சராக ஸ்டாலினும், மீண்டும் திமுக அரசும் தான் வர வேண்டும் என்று சொல்கிற தொகுதி மக்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் மீதுள்ள அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.
அந்த வகையில், சீனியர்கள் சிலருக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்புத் தர வேண்டாம் என ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டிருப்பதால் அது குறித்து தீவிர ஆலோசனையில் இருக்கிறார் தலைவர் ஸ்டாலின். குறிப்பாக, துரைமுருகன், கே.கே.எஸ். எஸ்.ஆர்., ராஜகண்ணப்பன், பொன்முடி, ஐ.பெரியசாமி, காந்தி, ஆவுடையப்பன் உள்ளிட்ட 10 நபர்களுக்கு மீண்டும் வாய்ப்பு இல்லை. இப்படி வாய்ப்பு மறுக்கப்பட்டால் அவர்களின் ரியாக்ஷன் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை மற்ற சீனியர்களிடம் விவாதிக்கும் முடிவில் இருக்கிறது எங்களின் தலைமை'' என்கிறார்கள் திமுக தரப்பினர்.
ஸ்டாலின் மாஸ்டர்பிளான்
சீனியர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்கிற போது, நிச்சயம் அவர்கள் தலைமை மீது அதிப்தியடைவார்கள். அதனால் அதனை எப்படி சமாளிப் பது? அவர்களை எப்படி சமாதானம் செய்வது? என்கிற யோசனையும் திமுக தலைமையிடம் இருக்கிறது. இந்த நிலையில், மீண்டும் திமுக ஆட்சி அமையும் போது தமிழகத்தில் சட்ட மேலவையைக் கொண்டு வரும் முடிவில் இருக்கிறார் ஸ்டாலின். அப்போது, சட்டப்பேரவையில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சீனியர்களையெல்லாம் சட்ட மேலவைக்கு கொண்டு வந்து விடலாம். இதை வைத்து அவர்களை சமாதானப்படுத்தி விடலாம் என்கிற திட்டத்தில் இருக்கிறது திமுக தலைமை என்கிறார்கள் உளவு வட்டாரத்தினர்.
திமுக கூட்டணி போட்டியிடும் இடங்கள்
இதுவரை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட சீட்
காங்கிரஸ் - 28 தொகுதிகள் (கை சின்னம்)
தேமுதிக- 10 தொகுதிகள் (முரசு சின்னம்)
விசிக - 8 தொகுதிகள் (பானை சின்னம்)
இந்திய கம்யூனிஸ்ட் - 5 தொகுதிகள் (கதிர் அரிவாள் சுத்தியல்)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 5 தொகுதிகள் (அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்)
மதிமுக - 4 தொகுதிகள் (3ல் உதயசூரியன் 1 தனி சின்னம்)
மமக - 2 தொகுதிகள் (உதயசூரியன்)
ஐயூஎம்எல் - 2 தொகுதிகள் (ஏணி சின்னம்)
கொமதேக - 2 தொகுதிகள் (உதயசூரியன்)
ஆகமொத்தம் 234 தொகுதிகளில், கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 66 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதம் 168 தொகுதிகள் உள்ளன. மக்கள் நீதி மய்யம், சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை, திமுக கூட்டணிக்கு நிபந்தனையின்றி ஆதரவு அளிப்பதாக மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
175 சீட்களில் உதயசூரியன்
மதிமுக - 3, மமக - 2, கொமதேக - 2 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளன. இனி கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வாய்ப்புள்ளது. எனவே மொத்தமாக 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னம் 175 இடங்களில் போட்டியிடும்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications