வரிகளை தவிர்த்த ரவி! உடனே தீர்மானம் போட்ட முதல்வர்-தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை
சென்னை: தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய உரையை ஆளுநர் ஆர். என் ரவி முழுமையாக வாசிக்காததற்கு எதிராகவும், ஆளுநர் ரவி சுயமாக சில விஷயங்களை பேசியதற்கு எதிராகவும் தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் உடனே தீர்மானம் நிறைவேற்றினார். இதையடுத்து ஆளுநர் சுயமாக பேசிய உரை நீக்கப்பட்டு அரசு தயாரித்த முழு உரை சேர்க்கப்பட்டது. தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் இப்படி முதல்முறை நடக்கிறது.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று ஏகப்பட்ட பரபரப்புகள், பல அதிரடி சம்பவங்கள் நடந்துவிட்டன. இன்று சட்டசபை தொடங்கும் முன்பே ஆளுநர் ஆர். என் ரவி உரை எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்புகள் நிலவி வந்தன. ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு என்று வார்த்தையை பயன்படுத்த கூடாது, இதற்கு பதிலாக தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று கூறியதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து தமிழ்நாடு அரசு, தமிழக அரசு என்ற பெயர் சர்ச்சை தமிழ்நாட்டில் எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்று நடக்கும் கூட்ட தொடரில் தமிழ்நாடு என்பதை ஆளுநர் உச்சரிப்பாரா? அல்லது தமிழகம் என மாற்றி சொல்வாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆளுநர் உரை
இதையடுத்து இன்று சட்டசபையில் "தமிழ்நாடு" என்று கூறி ஆளுநர் ஆர். என் ரவி தொடக்கத்தில் பேசினார். அதாவது தமிழ்நாடு அரசு எழுதிய உரையில் தமிழ்நாடு என்ற வார்த்தை இருந்தது. அதை அப்படியே ஆளுநர் படித்தார். ஆனால் போக போக மற்ற இடங்களில் தமிழ்நாடு அரசு என்பதை கூறுவதை தவிர்த்து இந்த அரசு என்று கூறி அவர் பேசியதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. தமிழ்நாடு அரசு, திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை ஆளுநர் ரவி பயன்படுத்தவில்லை என்று காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பொதுவாக ஆளுநர் உரைகளை, ஆளுநர் படித்தாலும் அது தமிழ்நாடு அரசு தயாரித்து தரக் கூடிய உரைதான்.

மாற்றம்
இதை ஆளுநர்கள் அப்படியே வாசிப்பதுதான் வழக்கம். இன்றும் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர். என் ரவி வாசித்தார். ஆனால் அந்த உரையில் வெட்டி, ஒட்டி, சில வார்த்தைகளை மாற்றி ஆளுநர் பேசி இருக்கிறார். இதுதான் அவையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூகநீதி, சுயமரியாதை, திராவிட மாடல் என்ற வார்த்தைகள் இருந்ததால் 65வது பத்தியை வாசிக்காமல் முழுமையாக கடந்து சென்ற ஆளுநர் என்று கூறப்படுகிறது. அதேபோல் தமிழ்நாடு அரசு என்று கடைசி கட்டங்களில் அவர் சொல்லவில்லை. மாறாக இந்த அரசு என்று கூறியுள்ளார். இந்த பாகத்தில் இருந்த பெரியார் போன்ற தலைவர்களின் பெயர்களை ஆளுநர் ரவி வாசிக்கவில்லை.

நீக்கம்
ஆளுநர் இப்படி அரசின் உரையை வாசிக்காமல் சில மாற்றங்களை செய்வது தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். அதோடு தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி முழுமையாக படிக்கவில்லை என்றும் சில வார்த்தைகளை படிக்காமல் தவிர்த்து விட்டதாகவும் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உரையில், ஆளுநர் ரவி உரையில் தமிழ்நாடு அரசு இயற்றிய பாகங்கள் சில இடம்பெறவில்லை. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி அப்படியே முழுமையாக படிக்க வேண்டும். ஆனால் முழுமையாக படிக்கவில்லை என்றும் சில வார்த்தைகளை படிக்காமல் தவிர்த்து விட்டுவிட்டார். இதனால் அவரின் உரையில் சுயமாக பேசிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் தாக்கல் செய்கிறேன். ஆளுநர் உரையை முழுமையாக படிக்காதது வருத்தம் அளிக்கிறது.

நீக்கம்
கொள்கைக்கு மாறாக அவர் செயல்பட்டு உள்ளார். சட்டசபை விதிகளின்படி அரசு தயாரித்து கொடுத்ததை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும். அது விதி மீறல். ஆளுநரின் இந்த செயல் வருத்தம் தருவதால் அதற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருகிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதையடுத்து ஆளுநர் படித்த உரை வாக்கெடுப்பு மூலம் அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. மாறாக அரசு தயாரித்த மொத்த உரையும் அவை குறிப்பில் இடம்பெற்றது. ஆளுநர் பேசிய சில நிமிடங்களில் முதல்வர் ஸ்டாலின் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானமும் உடனே நிறைவேற்றப்பட்டது.

வெளிநடப்பு
ஆளுநர் உரைக்கு எதிராக முதல்வரே தீர்மானம் நிறைவேற்றுவதும் இதுவே முதல்முறையாகும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் இருந்து பாதியிலேயே ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறினார். ஆளுநர் திரு. ரவி சட்டமன்றத்தில் தனது இருக்கையில் அமர்ந்திருந்த போதே அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து அவர் முன்பாகவே படிக்கத் தொடங்கினார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். இதையடுத்து உடனடியாக சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார் தமிழ்நாடு ஆளுநர். ஆளுநர் ஒருவர் இப்படி அவையில் இருந்து, தேசிய கீதம் இசைக்கப்படும் முன் வெளியேறுவதும் இதுவே முதல்முறையாகும்.

சென்னா ரெட்டி ஆளுநர்
1993 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் ஆளுநராக சென்னா ரெட்டி இருந்தார். அப்போது சட்டசபையில் இதேபோல் ஆளுநருக்கும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு மோதல் ஏற்பட்டது. அதோடு சென்னா ரெட்டி ஆளுநராக இருந்தபோதுதான், தன்னிடம் அவர் தகாத முறையில் நடந்துகொண்டார் என்று குற்றம் சாட்டினார். இதனால் சட்டசபையில் மிகப்பெரிய மோதலே அப்போது வெடித்தது. அதன்பின் தமிழ்நாடு அரசியலில் ஆளுநருக்கும் - முதல்வருக்கும் இடையில் சட்டசபையிலேயே மோதல் வெடித்தது இல்லை. இன்றுதான் முதல்முறையாக : தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய உரையை ஆளுநர் ஆர். என் ரவி முழுமையாக வாசிக்காததற்கு எதிராகவும், ஆளுநர் ரவி சுயமாக சில விஷயங்களை பேசியதற்கு எதிராகவும் தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் உடனே தீர்மானம் நிறைவேற்றினார். தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் இப்படி முதல்முறை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications