மத்திய அரசுக்கு எதிராக பன்னீர் செல்வம் சொன்ன அந்த வார்த்தை.. அவை குறிப்பிலிருந்தே நீக்கப்பட்டது
சென்னை: மத்திய அரசு தொடர்பாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் சட்டசபையில் பேசிய பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி செய்வதற்கு எதிராக தமிழக அரசின் சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளித்தால் மத்திய நீர்வள ஆணையத்தை கண்டித்து தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதனை துணை முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அப்போது மத்திய அரசுகள் குறித்து அறிஞர் அண்ணா கூறியதாக சுட்டிக்காட்டி ஒரு வார்த்தையை பன்னீர்செல்வம் தெரிவித்தார். அப்போது திமுக சார்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து, அவரும் அதற்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார்.
இதனால் அவையில் பரபரப்பு சூழல் ஏற்பட்டது. ஆனால், சபாநாயகர் தனபால் மத்திய அரசு தொடர்பாக பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்களை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.
அண்ணா கூறியதைத்தான் தான் கூறினேன் என்று பன்னீர்செல்வம் கூறிய போதிலும் கூட அந்த வார்த்தையை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.
மத்திய அரசுக்கு எதிராக பன்னீர்செல்வம் ஒரு கருத்தை கூறியதும் அதை அவை குறிப்பில் இருந்து எடுக்க கூடிய அளவுக்கு கடுமையானதாக இருந்ததும் அரசியல் பரபரப்புக்கு காரணமாகியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications