டாஸ்மாக் முறைகேடு..பாஜக தலைவர்கள் கைது! தேதி அறிவிக்காமல் போராடினால் என்ன செய்வீங்க? அண்ணாமலை கேள்வி
சென்னை: டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளதாகக் கூறி, இன்று தமிழக பாஜக முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், பாஜக தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேதியே அறிவிக்காமல் போராட்டம் நடத்தினால் என்ன செய்வீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் எனப்படும் டாஸ்மாக் தமிழகத்தில் தற்போது மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் சில்லறை மது விற்பனை கடைகள் இருக்கிறது. இங்கு பல்வேறு தனியார் மது உற்பத்தி நிறுவனங்களின் மது வகைகள் விற்கப்படுகிறது.

இதில் நிர்ணயத்தை விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் கணக்கில் காட்டாமல் தனியார் மது உற்பத்தி நிறுவன உரிமையாளருடன் சேர்ந்து முறைகேடு நடப்பதாக புகார் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த தகவலின் அடிப்படையில் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை முதல் சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், சென்னை, புதுக்கோட்டை, கோவை , ஆகிய பகுதிகளில் சோதனை சனிக்கிழமை வரை நீடித்தது.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், அம்பத்தூர் டாஸ்மாக், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சொந்தமான அக்காடு டிஸ்டிலர்ஸ் மதுபான நிறுவனம் அக்கார்டு ஹோட்டல், ஆயிரம் விளக்கு உள்ள எஸ்என்ஜெ டிஸ்டிலரீஸ், டி நகரில் உள்ள கால்ஸ் மதுபானம், சிவா டிஸ்டிலரீஸ், மயிலாப்பூர் ஆர் கே சாலையில் உள்ள எம்ஜிஎம் மதுபானம் நிறுவனம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை வரை சோதனை நடைபெற்ற நிலையில், சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட அமலாக்கத்துறை டாஸ்மாக்கில் சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக கூறியிருந்தது. இந்நிலையில், டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து 17ஆம் தேதி ஆன இன்று சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இதை அடுத்து சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. மேலும் போராட்டத்திற்கு கிளம்பிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேதியை அறிவிக்காமல் போராட்டம் நடத்தினால் என்ன செய்வீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பில், இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா திருமதி தமிழிசை செளந்தரராஜன், மாநிலச் செயலாளர் சகோதரர் திரு வினோஜ் பி செல்வம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.
பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது? தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?" என கூறியுள்ளார்.
-
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
"பீர் டூ ஒயின் வரை".. தேர்தலால் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்க கட்டுப்பாடு! எத்தனை பாட்டில் வாங்கலாம்?












Click it and Unblock the Notifications