ஆகஸ்ட் 17.. நெல்லையில் நடக்கும் தமிழக பாஜகவின் முதல் மாநாடு.. நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!
சென்னை: சட்டமன்றத் தேர்தலையொட்டி ஆகஸ்ட் 17ஆம் தேதி தமிழக பாஜகவின் முதல் மாநாடு நெல்லையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு நாம் சுமை அல்ல, பலம் என்பதை என்பதை காட்ட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியுள்ளது. நெல்லையில் மாநாடு நடத்துவதன் மூலமாக, மீண்டும் பாஜகவின் குறி தென் மாவட்டங்கள் தான் என்பதாகவும் பார்க்கப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். திமுக தரப்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரம் மூலமாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் வாக்கு சேகரிப்பு நடந்து வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் தமிழக சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.

தவெக தரப்பிலும் ஆகஸ்ட் மாதம் மாநாடும், செப்டம்பரில் விஜய் சுற்றுப்பயணமும் மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஜக தரப்பில் அடுத்தக் கட்ட தேர்தல் பணிகளை தொடங்க ஆயத்தமாகி வருகிறது. ஏற்கனவே மதுரையில் நடந்த முருகன் மாநாடு பாஜகவுக்கு உற்சாகத்தை கொடுத்தது. தற்போது அடுத்தக்கட்ட தேர்தல் பணிகளை பாஜக மேற்கொள்ள ஆயத்தமாகி வருகிறது.
அதன்படி செங்கல்பட்டில் பாஜகவின் பூத் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது பாஜக மாநில தலைவர்கள் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ஆகஸ்ட் 17ல் தமிழக பாஜகவின் முதல் மாநாடு நெல்லையில் நடக்கும் என்று அறிவித்தார். இதன் மூலமாக மதுரையை தொடர்ந்து தமிழக பாஜக நெல்லையை குறி வைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நெல்லையில் மிகப்பெரிய ஆதரவு இருக்கும் நிலையில், அதனை கருத்தில் கொண்டே சொந்த ஊரில் இருந்து தேர்தல் பணிகளை தொடங்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறார். இதன்பின் ஒவ்வொரு 2 மாதங்களிலும் ஒரு மாநாட்டை பாஜக தரப்பில் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டின் மூலமாக அதிமுகவுக்கு பாஜக சுமை அல்ல, பலம் என்பதை காட்ட வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தி இருக்கிறது. தென் மாவட்டங்களில் விஜய்-க்கு அதிகரித்து வரும் ஆதரவு, நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி ஆகிய பின்னடைவை சரி செய்ய, ஒவ்வொரு மாதமும் பூத் கமிட்டி நிர்வாகிகள் தெருமுனை பிரச்சாரத்தை முன்னெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை! எங்கிருந்தாலும் வாழ்க..! சொன்னது நயினார் நாகேந்திரன் இல்லை! யார்னு பாருங்க!












Click it and Unblock the Notifications