Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"செமிகண்டக்டர்" துறைக்கு கிடைத்த பூஸ்ட்.. தரமணியில் வருது பிரம்மாண்ட மையம்.. பட்ஜெட்டில் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் காலத்தில் செமிகண்டக்டர் துறை தான் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உலக நாடுகள் செமிகண்டக்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதற்கிடையே இன்று தாக்கலான தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் செமிகண்டக்டர் துறை தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது. தொழில்துறை சார்ந்து தமிழக பட்ஜெட்டில் இருந்த முக்கிய அறிவிப்புகள் கொடுத்துப் பார்க்கலாம்!

தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று மாநிலத்தின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கியமான அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். குறிப்பாகத் தொழில் வளர்ச்சி குறித்தும் முக்கிய அறிவிப்புகள் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.

Tamil nadu Budget 2026 Semconductor to get major boost and advanced design center coming in Taramani

தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம்

ரூ.500 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்த அவர், தரமணியில் மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்ப மையம் அமைக்கப்படுகிறது என்றும் ஒரு டிரில்லயன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி தமிழக அரசு நகர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்குடன் இயங்கும் தமிழக அரசு, உலக முதலீட்டாளர் மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தி முதலீடுகளை ஈர்க்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகள்

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 36 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில் ரூ.12.3 லட்சம் கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடுகளுக்கான 1179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. மாநிலம் முழுக்க சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் மாவட்டம் தோறும் தொழில் பூங்கா அமைக்க அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு தான் முதலிடம்

தமிழகத்தில் 2021 வரை, 15 மாவட்டங்களில் 24 சிப்காட் பூங்காக்கள் இருந்தன. இப்போது மேலும், 12 புதிய மாவட்டங்களில் புதிய தொழில்பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்போது 54 தொழில்பூங்காக்கள் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் நடவடிக்கைகளால் 2024-25 நிதியாண்டில் மாநிலத்தின் வளர்ச்சி 11.19%ஐ எட்டி, நாட்டிலேயே முதல் இடத்தை எட்டியுள்ளது.

மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 41% பங்களிப்புடன் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது. திருச்சி, மதுரை, ஓசூர் ஆகிய இடங்களில் புதிய டைட்டல் பூங்கா நிறுவப்பட்டு வருகிறது.

செமிகண்டக்டர் இயக்கம்

தமிழ்நாடு செமிகண்டக்டர் இயக்கம் 2030 செயல்திட்டத்தின் அடிப்படையில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்படும். சென்னை ஐஐடியுடன் இணைந்து தரமணியில் மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்ப மையம் மற்றும் செமிகண்டக்டர் வடிவமைப்பு, சோதனை மையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+