சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேனியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம் ஏன்? தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: தேனியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டது குறித்து விளக்கம் அளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாப் சாஹு பயன்படுத்தாத வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றம் செய்வது வழக்கமான நடைமுறை தான் என்றார்.

தேனி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திராத் குமார், திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

Tamil Nadu Chief Electoral Officer Satyabrata Sahoo explain whyt vote machine changed in theni,

தேனியில் 18ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின்னர் வாக்கு இந்திரங்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மதுரையில் இருந்து வாக்கு இந்திரங்கள் தேனிக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு அமமுக கட்சியினர் தேனி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விளக்கம் அளித்தார்.

இதனிடையே இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, சத்ய பிரபா சாஹு விளக்கம் அளித்துள்ளர்.

அவர் அளித்துள்ள விளக்கத்தில் பயன்படுத்தாத வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றம் செய்வது வழக்கமான நடைமுறை தான். மறுவாக்குப்பதிவு நடந்தால் பயன்படுத்துவதற்காக வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஈரோடு, தேனிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒருவேளை மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டால் இயந்திங்கள் தேவை என்பதால் மாற்றம் செய்யப்பட்டன என்றார்.

English summary
lok sabha elections 2019 : Tamil Nadu Chief Electoral Officer Satyabrata Sahoo explain whyt vote machine changed in theni, he says this is Routine action
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X