நீட் விலக்கு.. தமிழக ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு
சென்னை: நீட் விலக்கு தொடர்பாகத் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.
தமிழ்நாட்டில் நேற்று முதல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை வெளியான முடிவுகளில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

இந்தச் சூழலில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர் என் ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் நீட் விலக்கு சட்ட மசோதா குறித்துப் பேசப்பட்டதாக ஆளுநர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த செப். 14ஆம் தேதி நீட் விலக்கு கோரி தமிழ்நாடு சட்டசபையில் சட்ட மசோதா இயற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்தச் சூழலில் தான் ஆளுநரை முதல்வர் சந்தித்துப் பேசுகிறார்.
நீட் விலக்கை திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திலும் கூட நீட் விலக்கை திமுக ஒரு வாக்குறுதியாக அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்தார். தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளை மற்றும் திமுக எம்பிகள் தொடர்புடைய வழக்குகளில் உறுதியான நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications