Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசத்தும் ஆவின்.. பால், நெய் மட்டுமில்ல.. இனிமேல் நூடுல்ஸ், கேக், பாயாசம் மிக்சும் கிடைக்கும்

ஆவின் நிறுவனத்தில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தால் புதிதாக தயாரிக்கப்பட்ட 5 பால் பொருட்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று அறிமுகம் செய்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவின் நிறுவனம் புதிதாக தயாரித்து உள்ள பிரீமியம் மில்க் கேக், மாம்பழம் ஸ்ட்ராபெரி யோகர்ட் பானம், பாயாசம் மிக்ஸ்,நூடுல்ஸ், டெய்ரி ஒயிட்னர் ஆகிய பொருட்களை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

ஆவின் நிறுவனம் மூலம் பால், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் முதலான பால் உபயோக பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவை ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆவின் பால் பொருட்களான ஆவின் மைசூர்பா, பால்கோவா, டேட்ஸ் கோவா, குல்பி ஐஸ், மில்ஷேக், பாதாம் பால் பவுடர் உள்ளிட்டவை மற்றும் ஆவின் மோர் மற்றும் தயிர் பாக்கெட்டுகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

5 புதிய பால் பொருட்கள்

5 புதிய பால் பொருட்கள்

இதனை தொடர்ந்து தற்போது ஆவின் நிறுவனம் 5 புதிய பால் பொருட்களை தயாரித்து உள்ளது. இந்த புதிய தயாரிப்புகள் பிரீமியம் மில்க் கேக், மாம்பழம் ஸ்ட்ராபெரி சுவையில் யோகர்ட் பானம், பாயாசம் மிக்ஸ் ஆகியவை ஆகும். அந்த வகையில் புதிதாக தயாரிக்கப்பட்ட 5 பால் பொருட்களை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். அதே போல பால் புரத நூடுல்ஸ், டெய்ரி ஒயிட்னர் ஆகிய ஆவின் பால் பொருட்களையும் முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார். இந்த புதிய பால் பொருட்களும் மக்களிடையே அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கால்நடை தீவன தொழிற்சாலை

கால்நடை தீவன தொழிற்சாலை

ஈரோட்டில் விரிவாக்கப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலை, ஓசூரில் புதிய தாது உப்புக் கலவை தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9316 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 25 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் மற்றும் மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் 4.26 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 39 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 26.66 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. இந்திய அளவில் கூட்டுறவு அமைப்பின் கீழ் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

கால்நடைகளின் உடல் ஆரோக்கியம்

கால்நடைகளின் உடல் ஆரோக்கியம்

பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளின் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், உரிய நேரத்தில் சினை பிடித்து கன்று பெறவும், தரமான பால் மற்றும் அதிக அளவு பால் பெற்று பால் உற்பத்தியாளர்கள் பொருளாதார ரீதியில் லாபம் ஈட்டவும், கால்நடைகளுக்கு தரமான கால்நடை தீவனம் வழங்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். இதனைக் கருத்தில் கொண்டு, ஈரோடு ஒன்றியத்தில் 1982 ஆம் ஆண்டு நாளொன்றுக்கு 100 மெட்ரிக் டன் உற்பத்திதிறன் கொண்ட கால்நடைத் தீவனத் தொழிற்சாலை நிறுவப்பட்டு தீவன உற்பத்தி தொடங்கப்பட்டது. பின்னர், இத்தொழிற்சாலையில் புதிய உபகரணங்கள் நிறுவப்பட்டு, நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன் தீவன உற்பத்தி திறன் கொண்டதாக உயர்த்தப்பட்டது.

தீவன ஆலையின் உற்பத்தித் திறன்

தீவன ஆலையின் உற்பத்தித் திறன்

பால் உற்பத்தியாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இத்தீவன ஆலையின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிக்கும் பொருட்டு கூடுதல் இயந்திரங்கள் நிறுவி, உற்பத்தி அளவினை நாளொன்றுக்கு 150 மெட்ரிக் டன்னிலிருந்து 300 மெட்ரிக் டன்னாக உயர்த்தும் வகையில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 1 கோடியே 70 இலட்சம் ரூபாயும், ஒன்றிய பங்களிப்பாக 1 கோடியே 70 இலட்சம் ரூபாயும், என மொத்தம் 3 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன்னாக உற்பத்தி திறன் உயர்த்தப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (19.1.2022) தலைமைச் செயலகத்தில் திறந்து வைத்தார்.

 19 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள்

19 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள்

இதன்மூலம் 19 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களை சார்ந்த 7792 பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பால் உற்பத்தியாளர்களின் கறவைகளுக்கு கால்நடைத் தீவனம் வழங்க வழிவகை ஏற்படும். கறவையினங்களின் பால் உற்பத்தி, இனப்பெருக்க திறன் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் ஆகியவற்றை அதிகரிப்பதில் தாது உப்புக் கலவை பங்கு மிக முக்கியமானதாகும். அவ்வாறு, பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்கு தாது உப்புக் கலவை வழங்கும் பொருட்டு ஈரோடு, விழுப்புரம், திருச்சிராப்பள்ளி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் நாளொன்றுக்கு தலா 12 மெட்ரிக் டன் உற்பத்திதிறன் கொண்ட தாது உப்புக் கலவை தொழிற்சாலைகள் மூலம் தாது உப்புக் கலவை தயாரிக்கப்பட்டு பால் உற்பத்தியாளர்களுக்கு பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலமும் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டும் வழங்கப்பட்டு வருகிறது.

தாது உப்புக் கலவை

தாது உப்புக் கலவை

இத்தொழிற்சாலையில் உற்பத்திச் செய்யப்படும் தாது உப்புக் கலவையில் கறவையினங்களுக்கு தேவையான அனைத்து விதமான தாது உப்புக்கள் சேர்க்கப்பட்டு, ஒரு கிலோ பைகளாக தயார் செய்யப்பட்டு, கிலோ ஒன்றுக்கு ரூ.50/- என்ற விலையில் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாதமொன்றிற்கு சுமார் 2.50 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். தாது உப்புக் கலவையின் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் ரூ.67.50 இலட்சம் மற்றும் ஒன்றிய பங்களிப்பாக ரூ.67.50 இலட்சம், என மொத்தம் 1 கோடியே 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நாளொன்றுக்கு 12 மெட்ரிக் டன் உற்பத்திதிறன் கொண்ட தாது உப்புக் கலவை தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+