உலக ஐயப்ப பக்தர்கள் மாநாடு! அழைப்பு விடுத்த பினராயி! முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை! காரணம்?
சென்னை: கேரளாவில் வரும் செப்டம்பர் மாதம் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கேரளா அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் அந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகித்து வருகிறது. கோவிலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள், கோவில் நிர்வாகம், கணக்கு வழக்கு உள்ளிட்ட அனைத்துமே திருவிதாங்கூர் தேவசம் போர்டு தான் நிர்வாகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி கேரளாவின் பம்பையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு மற்றும் கேரள மாநில அரசு சார்பில் 'லோக ஐயப்ப சங்கமம்' என்ற பெயரில் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவில்
இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழகம் வந்த கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சர் வி.என்.வாசன் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ஐயப்ப பக்தர்கள் மாநாட்டிற்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கும் இந்த மாநாட்டில் கேரளா மட்டுமல்லாது கர்நாடகா, தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும் என கேரளா அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
ஐயப்ப பக்தர்கள் மாநாடு
இந்த நிலையில் கேரளா ஐயப்பன் பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை அழைத்ததற்கு கேரள பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக பேசிய கேரளா மாநில பாஜக தலைவர் சந்திரசேகர்," பல ஆண்டுகளாக சபரிமலை மரபுகளை பக்தர்களை அவதூறு செய்தவர் பினராயி விஜயன். தமிழ்நாட்டின் மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் இந்துக்களின் நம்பிக்கைகளை அவதூறு செய்கின்றனர். இந்தியா கூட்டணி கட்சியினரின் ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு உண்மையான பக்தர்கள் செல்ல மாட்டார்கள்" எனவும் கூறியிருந்தார்.
முக ஸ்டாலின்
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"கேரளா மாநிலம், பம்பையில் 20.09.2025 அன்று நடைபெறவுள்ள திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழா நிகழ்ச்சியான "லோக அய்யப்ப சங்கமம்" நிகழ்வில் கலந்து கொள்ள கேட்டு, மாண்புமிகு கேரளா மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்கள், மாண்புமிகு கேரளா மாநில துறைமுகம், தேவசம், கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.வி.என். வாசவன் அவர்கள் மூலமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் வாயிலாக கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தார்.
பிடிஅர் பழனிவேல் தியாகராஜன்
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு கேரளா மாநில முதலமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முன்னரே முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் காரணமாக திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் பவள விழாவில் தான் கலந்து கொள்ள இயலாத சூழ்நிலை உள்ளது என்றும் இவ்விழாவில், தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர் பாபு அவர்களும், மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்களும் பங்கேற்பார்கள் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்." என கூறப்பட்டுள்ளது.
-
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications