டெல்லியில் சந்தி சிரிக்கும்.. தமிழக காங்கிரஸ் மோதல்.. குழாயடி சண்டை மாதிரி நடக்குதே.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று கடந்த 17-ந்தேதியோடு ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறார் செல்வப்பெருந்தகை. இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய நியமனங்கள் குறித்து கட்சியின் மேலிடத்தில் சில ஆலோசனைகள் நடந்துள்ளன.

செல்வப்பெருந்தகை மாநில தலைவர் பதவியில் அமர்ந்து 1 வருடமாகியும் அவருக்குத் தோதான மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளை நியமிக்க முடியவில்லை. கே.எஸ்.அழகிரி தலைவராக இருந்த போது நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்களும், மாநில நிர்வாகிகளுமே இப்போதும் நீடித்து வருகின்றனர். பொதுவாக, புதிதாக மாநில தலைவர் நியமிக்கப்பட்டால், முந்தைய தலைவரால் நியமிக்கப்பட்ட பதவிகள் அனைத்தும் தானாகவே காலியாகிவிடும். புதிய நிர்வாகிகளை புதிய தலைவர் நியமித்துக்கொள்ள கட்சி மேலிடம் அனுமதி அளிக்கும்.

congress

அந்த வகையில், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து 2 பட்டியலை ஏற்கனவே மேலிடத்துக்கு அனுப்பி வைத்தார் செல்வப்பெருந்தகை. ஆனால், அந்த பட்டியலுக்கு அப்ரூவல் கிடைக்காமல் பார்த்துக் கொண்டனர் செல்வப் பெருந்தகைக்கு எதிர் கோஷ்டிகள்.

இந்த நிலையில்தான், மாவட்ட தலைவர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் ஆன் லைன்னில் விண்ணப்பிக்கலாம் என்று கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார் செல்வப்பெருந்தகை. பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். புதிய மாவட்ட தலைவர்களை தேர்வு செய்வதில், அகில இந்திய மேலிடம் வகுத்து தந்த விதிகளை பயன்படுத்த திட்டமிட்டிருந்தார்.

கோஷ்டி மோதல்

அந்த விதிகளை பயன்படுத்தினால், தற்போது கோஷ்டி அரசியல் செய்து வரும் தலைவர்களின் ஆதரவாளர்கள் பலருக்கும் மாவட்ட தலைவர் பதவி வாய்ப்பு பறிபோகும். இதனை உணர்ந்து அதிர்ச்சி அடைந்த கோஷ்டித் தலைவர்கள், தங்களது ஆதரவு மாவட்ட தலைவர்கள் பலரையும் டெல்லிக்கு அனுப்பி வைத்து செல்வப்பெருந்தகைக்கு எதிராக மல்லிக்கார் ஜுன கார்கேவிடம் புகார் கொடுக்க முயற்சி செய்தனர். ஆனால், டெல்லிக்கு வந்த மாவட்ட தலைவர்களை சந்திக்க மறுத்து கார்கே, தமிழக காங்கிரசில் எல்லாம் முறையாகத்தான் இருக்குது. அவரை மாத்துங்க; இவரை மாத்துங்க ன்னு வரக்கூடாது. எல்லோரையும் மெட்ராஸ்சுக்கு போகச்சொல்லுங்க என்று உதவியாளர் மூலம் சொல்லி அவர்களை சந்திக்காமல் விரட்டியடித்தார் கார்கே.

நொந்து போன நிர்வாகிகள்

நொந்து போன மாவட்ட தலைவர்கள் காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து வெளியே வந்த போது, அங்கு வந்த பிரியங்கா காந்தியிடம் ஃபோட்டோ எடுத்துக்கொண்டு திரும்பிவிட்டனர். சத்தியமூர்த்திபவனில் இந்த டெல்லி சம்பவம்தான் பரபரப்பாக பேசு பொருளாகி வரும் சூழலில், செல்வப் பெருந்தகையே தலைவர் பதவியில் நீடிக்கட்டும் என்று மேலிடம் முடிவு எடுத்துள்ளதாகவும், அதேசமயம், செல்வப்பெருந்தகைக்கு எதிரானவர்களின் அதிருப்தியை சரி செய்ய, செயல்தலைவர்களை மீண்டும் நியமிக்கலாம் என்றும் ராகுல்காந்தியிடம் மல்லிகார்ஜுனகார்கே ஆலோசித்ததாகவும் தற்போது காங்கிரஸ் தரப்பில் சீக்ரெட்டாக பேசப்பட்டு வருகிறது.

இளைஞர்களுக்கு வாய்ப்பு

அதாவது, 40 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் சிலருக்கு மாநில தலைவரின் சுமையை குறைக்கும் வகையில் தலைமைப்பொறுப்பு வழங்கலாம் என்பதே கார்கேவின் திட்டம் என்கிறார்கள் கதர்சட்டையினர். இதற்கிடையே, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசு கடந்த 2 நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருக்கிறார். எதற்காக அவர் டெல்லியில் இருக்கிறார் என்று செல்வப் பெருந்தகை தரப்பில் ஆராயப்பட்டு வருகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+