சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் உயர்வு.. இன்று எத்தனை பேருக்கு கொரோனா தெரியுமா.. மோசமாகும் நிலைமை!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் 1636 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 1779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிக்சை பெறுவோர் எண்ணிக்கை 9,746 இல் இருந்து 10,487 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    #Covid-19 update தமிழகம்: இன்று மட்டும் 1,044 ஆண்களுக்கு கொரோனா பாசிட்டிவ்!

    சென்னையில் இன்று ஒரே நாளில் 664 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4082 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கவலை அளிக்கும் வகையில் வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றாவிட்டால் பழையபடி நிலைமை மோசமாகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இன்றைய பாதிப்பு

    இன்றைய பாதிப்பு

    ஏனெனில் இன்று ஒரே நாளில் 1779 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,73,219 ஆக உயர்ந்துள்ளது.

    சிகிச்சை எத்தனை பேர்

    சிகிச்சை எத்தனை பேர்

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,027 பேர் இன்று மீண்டனர். இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8,50,091 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 9,746 இல் இருந்து 10,487 ஆக உயர்ந்துள்ளது.

    எவ்வளவு மரணம்

    எவ்வளவு மரணம்

    தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 12,641 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஒரே நாளில் 7 பேரும், காஞ்சிபுரம், தென்காசி, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர்.

    80000 சோதனைகள்

    80000 சோதனைகள்

    கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக சோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 80,761 பேருக்கு RT-PCR பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் RT-PCR பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,87,71,192 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் 81,103 பரிசோதனைகள் இன்று மட்டும் நடத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை தமிழகத்தில் 1,90,92,221 RT-PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் அதிகம்

    சென்னையில் அதிகம்

    தமிழத்தில் மாவட்ட நிலவரம் என்று பார்த்தால் சென்னையில் மிக அதிகமாக பரவி வருகிறது.. சென்னையில் இன்று ஒரே நாளில் 664 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 162 பேருக்கும், கோவையில் 153 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் 108 பேருக்கும், திருவள்ளூரில் 89 பேருக்கும் கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்கு எவ்வளவு பேர்

    எங்கு எவ்வளவு பேர்

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஓரே நாளில் 9,746 இல் இருந்து 10,487 ஆக உயர்ந்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அதிகபட்சமாக சென்னையில் 4082 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1088 பேரும், கோவையில் 936 பேரும், திருவள்ளூரில் 516 பேரும், தஞ்சாவூரில் 465 பேரும், காஞ்சிபுரத்தில் 339 பேரும், மதுரையில் 226 பேரும், திருப்பூரில் 265 பேரும் சிகிச்சை பெறுகிறார்கள்-

    English summary
    Today, 1779 people have been tested for coronavirus in Tamil Nadu. Shockingly, Chennai., Coimbatore, Thiruvallur, Madurai, Kanchipuram and Chengelpet tested more positive cases in the last four days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X