தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று 5,776 பேர் பாதிப்பு.. 89 பேர் மரணம்
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,69,256 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சுமார் 6 ஆயிரத்திற்கு கீழ் என்கிற அளவிலேயே உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனை அளவும் 80 ஆயிரம் என்கிற அளவில் உள்ளது. கொரானாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைவிட அதிகமாகவே உள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,69,256 ஆக உயர்ந்துள்ளது.

தொற்றைவிட குணம் அதிகம்
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5,930 பேர் குணம் அடைந்தனர். இதனால் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் 4,10,116
ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1052 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோவையில் 666 பேரும், கடலூரில் 530 பேரும், சேலத்தில் 521 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை பலி எண்ணிக்கை
தமிழகத்தில் கொரோனாவால் இன்று 89 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 7925 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 16 பேர் பலியாகி உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக சேலம் மற்றும் திருவள்ளூரில் 6 பேரும், கடலூரில் 5 பேரும், புதுக்கோட்டையில் 5 பேரும் பலியாகி உள்ளனர். கோவை , ராணிப்பேட்டை, திருவாரூரில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

எவ்வளவு நோயாளிகள்
தமிழகத்தில் இன்று 80,503 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 53,79,011 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 78,526/ தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பபட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 52,04,757 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் தொற்று உறுதி செய்யப்பட்ட 4,69,256 பேரில் 4,10,116 பேர் குணம் அடைந்துவிட்டனர். 7,925 பேர் பலியாகி உள்ளனர். தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் தற்போது 51,215 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

கோவையில் உயர்வு
சென்னையில் இன்று ஒரே நாளில் 949 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 142603 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புடன் தற்போது 11145 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 524 பேரும், கடலூரில் 398 பேரும், திருவண்ணாமலையில் 262 பேரும், திருவண்ணாமலையில் 242 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications