2300 ஆக குறைந்த கொரோனா பாதிப்பு.. சென்னையில் சூப்பர் மாற்றம்! சரசரவென குறைந்த நோயாளிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 2,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,36,777 ஆக உயர்ந்துள்ளது. இதில் தற்போது 7,39,147 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது, 5 ஆயிரம் என்று இருந்த நிலையில் தற்போது 2300 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 19 ஆயிரம் ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று சென்னை, கோவை., செங்கல்பட்டு, சேலம், திருப்பூர், ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த எண்ணிக்கை

மொத்த எண்ணிக்கை

தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 2,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,39,147 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா டிஸ்சார்ஜ்

கொரோனா டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 2,402 பேர் மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 7,08,846 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 650 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோவையில் 233 பேரும், செங்கல்பட்டில் 224 பேரும், சேலத்தில் 128 பேரும், திருவள்ளூரில் 99 பேரும், திருப்பூரில் 122 பேரும், ஈரோட்டில் 108 பேரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா மரணம்

கொரோனா மரணம்

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 27பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 11,299 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 13 பேர் பலியாகி உள்ளனர். கோவை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தலா 2 பேர் பலியாகி உள்ளனர்.

பரிசோதனை எவ்வளவு

பரிசோதனை எவ்வளவு

தமிழகத்தில் கொரோனாவை கண்டுபிடிக்க பிசிஆர் பரிசோதனை தீவிரமாக நடக்கிறது. இன்று மட்டும் 80,786 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,04,06,226 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 79,985 தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பபட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,01,32,378 தனிநபர்களுக்கு கொரோனானா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 19,002 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று ஒரே நாளில் 612 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 203685 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்புடன் 6017 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் இன்று 222 பேரும், திருவள்ளூரில் 143 பேரும், சேலத்தில் 108 பேரும், செங்கல்பட்டில் 127 பேரும், திருப்பூரில் 118 பேரும், ஈரோட்டில் 116 பேரும், காஞ்சிபுரத்தில் 88 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+