என்னது பாரத குடியரசு தலைவரா? "ஒன்றிய" அரசே "இந்தியா" கண்டு அச்சமோ? முத்தரசன் பொளேர் கேள்வி
சென்னை: ஜி 20 மாநாட்டை ஒட்டிய விருந்துக்கான ஜனாதிபதி அழைப்பிதழில் பாரத குடியரசுத் தலைவர் என இடம் பெற்றுள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு கடுமையாக கண்டித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா. முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கை:

ஜி 20 மாநாட்டை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்துக்கான அழைப்பை இந்திய குடியரசு தலைவர் அனுப்பி இருக்கிறார். ஆங்கிலத்தில் அமைந்த அந்த அழைப்பிதழில், 'பாரத குடியரசு தலைவர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
'இந்தியா' என்ற நம் தாய் நாட்டின் பெயரை உச்சரிப்பதற்கோ எழுதுவதற்கோ ஒன்றிய அரசு அஞ்சுகிறது.
இந்தி மொழியில் எழுதப்படும் பெயர்களை மொழிபெயர்க்கும் போது, அந்தந்த மொழிச் சொற்களில் மொழி மாற்றம் செய்வதற்கு பதிலாக, இந்திச் சொற்களை அப்படியே எழுத வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் மட்டுமல்லாது சட்டங்களின் பெயர்களையும் கூட இந்தியிலேயே எழுதும் முறை திணிக்கப்படுகிறது.
இந்தி மொழி அறியாத இந்திய மக்களை, அந்நியப்படுத்தும் ஒன்றிய அரசின் பொருத்தமற்ற அணுகுமுறையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு முத்தரசன் கூறியுள்ளார்.
இதனிடையே "இந்தியா" என்ற பெயரை மாற்றி "பாரத்" அல்லது "பாரத குடியரசு" என மாற்றுவதற்கான நடவடிக்கையை மத்திய அர்சு மேற்கொண்டுள்ளது; வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் இதற்கான தீர்மானங்கள் முன்வைக்கப்படலாம் என பரவிய தகவல் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அமைச்சர்கள், பாஜக மாநில முதல்வர்கள் பலரும் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications