மத்திய அரசே! அதானியை கைது செய்! தேவை சிபிஐ விசாரணை!நவ.28-ல் தமிழ்நாடு முழுவதும் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
சென்னை: சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களில் பல்லாயிரம் கோடி லஞ்சம் ஊழல் செய்து சிக்கியுள்ள தொழிபதிபர் அதானியை கைது செய்ய வேண்டும்; அதானி ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மத்திய அரசுக்கு அலுவலகங்கள் முன்பாக வரும் 28-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு (சிபிஎம்) அறிவித்துள்ளது.
சிபிஎம் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆதரவோடும் ஒத்துழைப்போடும் தொடர்ச்சியாக பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு வரும் அதானி நிறுவனம் தற்போது மீண்டும் ஒரு பெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. அதானி நிறுவனத்தின் மீது பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு எதிரான கைது வாரண்டையும் பிறப்பித்துள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்பு, அயலுறவு மற்றும் ஊழல் தடுப்புச் சட்டங்களை மீறி, முதலீட்டாளர்களை ஏமாற்றி ரூ. 6,300 கோடி அளவிற்கு மோசடி செய்ததோடு இந்திய அதிகாரிகளுக்கு ரூ. 2,029 கோடி அளவிற்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் அதானி நிறுவனம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளதாக ஆதாரங்களோடு அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை அடுத்த 20 ஆண்டுகளுக்கு பெறுவதற்காகவும், அதன் மூலமாக கிடைக்கவுள்ளள ரூ.16,800 கோடி லாபத்திற்காக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது, சட்டங்களை மீறி முறைகேடாக மூலதனத்தை திரட்டியது உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி உள்ளிட்ட பலர் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கு அதானி குழுமத்தால் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்கள் ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளன. மோடி அரசின் நிர்ப்பந்தத்தினால் அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த எல்.ஐ.சி நிறுவனம் ரூ.12,000 கோடியை இழக்க நேரிட்டுள்ளது. இதேபோல், எஸ்.பி.ஐ., பேங்க் ஆப் இந்தியா உள்பட பல வங்கிகளும் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. அதானி மீதான இத்தகைய குற்றச்சாட்டை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் அதானி நிறுவனத்துடனான தனது வர்த்தக ஒப்பந்தங்களை திரும்பப் பெற்றுள்ளன.
ஏற்கனவே SEBI விதிகளை ஏமாற்றியது, ஏராளமான நிழல் நிறுவன முதலீடுகள் மூலம் பங்குச்சந்தையில் தனது மதிப்பை செயற்கையாக அதிகரித்துக் கொண்டது, மாநில மின்வாரியங்களுக்கு தரமற்ற நிலக்கரியை வழங்கி அரசுக்கு பல்லாயிரம் கோடி நட்டத்தை உருவாக்கியது என பல்வேறு சட்ட விரோத முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அதானி, தற்போது மீண்டும் பெரும் ஊழல் - லஞ்சப் புகாரில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில், வழக்கம் போல அவர் தப்பிவிடாமல் சட்ட ரீதியான உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு அவரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதையும், அதானி நிறுவன ஊழலுக்கு துணை நின்ற அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரையும் கைது செய்திடவும், இவ்வழக்கினை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தி வெளிப்படையான புலன் விசாரணை மேற்கொள்வதையும் ஒன்றிய அரசு உறுதி செய்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட நிறுவனங்களில் தமிழ்நாடு மின்வாரியத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளதால் இது தொடர்பான முழு விசாரணைக்கு உத்தரவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், உண்மை விபரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டுமெனவும், கூடுதலான கட்டணத்தில் அதானி நிறுவனத்துடன் மின்சார கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வலுவான கண்டன இயக்கங்களை முன்னெடுக்க கட்சி அணிகளையும், ஜனநாயக சக்திகளையும், அனைத்து தரப்பு மக்களையும் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் வரும் 28-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக அதானியை கைது செய்ய வேண்டும்; சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருப்பதாக சிபிஎம் அறிவித்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications