நிம்மதி! தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா.. இன்று 736 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று மாநிலத்தில் 736 பேருக்கு மட்டும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்று மொத்தம் 21 மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு 10க்கும் கீழ் உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் வைரஸ் பாதிப்பு கொரோனா 2ஆம் அலை உச்சத்தில் உள்ளது. இதையடுத்து மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
ஊரடங்கிற்குப் பின்னரே மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு குறையத் தொடங்கியது. ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், கொரோனா வேக்சின் பணிகளால் மட்டுமே தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வருகிறது.

தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.01 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 736 பேருக்கு மட்டுமே வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை மொத்தம் 27,25,467 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தில் கொரோனா பாசிட்டிவ் விகிதமும் தொடர்ந்து கட்டுக்குள்ளேயே உள்ளது. தமிழகத்தின் பாசிட்டிவ் விகிதம் தற்போது 0.7%ஆக உள்ளது. அதிகபட்சமாகச் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 1.5%ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் 0.8%ஆக பாசிட்டிவ் விகிதம் உள்ளது.

கொரோனா உயிரிழப்புகள்
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் என மொத்தம் 9 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாநிலத்தில் 36,463 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று மாநிலத்தில் 8,382ஆக இருந்த ஆக்டிவ் கேஸ்கள், இன்று 8,337ஆகக் குறைந்துள்ளது அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 772 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழ்நாட்டில் 26,80,667 பேர் கொரோனாவில் இருந்து முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்

மாவட்ட வாரியாக பாதிப்பு
மாவட்ட வரியான கொரோனா பாதிப்பில் சென்னை தான் மிக மோசமாக உள்ளது. தலைநகர் சென்னையில் 107 பேருக்கும் கோவையில் 109 பேருக்கும் செங்கல்பட்டில் 53 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை தவிர வேறு எந்த மாவட்டத்திலும் வைரஸ் பாதிப்பு 100ஐ தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மொத்தம் 21 மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு 10க்கும் கீழ் உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications