18 மாவட்டங்களில் 100க்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு... ஆறுதல் தரும் மாவட்ட நிலவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் உள்ள 37 மாவட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, காஞ்சிபுரம், வேலூர், தேனி உள்பட 19 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இன்று அதிகமாக உள்ளது. அதேநேரம் கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்பட 18 மாவட்டங்களில் 100க்கும் குறைவானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியான நிலவரத்தை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உயிரிழப்பை தடுக்கவும், விரைவாக மக்களை காக்கவும் பல நடவடிக்கைகளை அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வந்த போதிலும் தொற்று பாதிப்பும் குறையவில்லை. இதில் கவலை அளிக்கும் விஷயம் என்றால் உயிரிழப்பு தொடர்ந்து உயர்ந்து வருவது தான்.

தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்துவிட்டது. 10 மாவட்டங்களில் மட்டுமே தொற்று பாதிப்பு மிக கடுமையாக உள்ளது. மாவட்டவாரிய நிலவரத்தை இப்போது பார்பபோம்.

செங்கல்பட்டு திருவள்ளூரிலும்

செங்கல்பட்டு திருவள்ளூரிலும்

சென்னையில் இன்று ஒரே நாளில் புதிதாக 196 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 116650 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 436 பேர், திருவள்ளூரில் 488 பேர், கோவையில் 395 பேர், காஞ்சிபுரத்தில் 307 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா உயர்வு

கொரோனா உயர்வு

வேலூரில் 264 பேர், தேனியில் 205 பேர், புதுக்கோட்டையில் 187 பேர், மதுரையில் 120 பேர், திருநெல்வேலியில் 130 பேர், சேலத்தில் 169 பேர், திருச்சியில் 104 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில் 94 பேர், கன்னியாகுமரியில் 133 பேரும், விருதுநகரில் 76 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோட்டில் 97 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டையில் 152

ராணிப்பேட்டையில் 152

ராணிப்பேட்டையில் 152 பேரும், கடலூரில் 184 பேரும், கள்ளக்குறிச்சியில் 71 பேரும், திருவாரூரில் 65 பேரும், விழுப்புரத்தில் 129 பேரும், திருப்பூரில் 34 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரியில் 17 பேரும், தென்காசியில் 86 பேரும், திண்டுக்கல்லில் 108 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறைந்த பாதிப்பு

குறைந்த பாதிப்பு

ராமநாதபுரத்தில் 58 பேரும், திருப்பத்தூரில் 12 பேரும், தூத்துக்குடியில் 94 பேரும், அரியலூரில் 77 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரூரில் 30 பேரும், கிருஷ்ணகிரியில் 48 பேரும், நாமக்கல்லில் 42 பேரும், நீலகிரியில் 24 பேரும், பெரம்பலூரில் 42 பேரும் , சிவகங்கையில் 54 பேரும் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா நிலவரம்

கொரோனா நிலவரம்

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று என்ற விவரத்தை இப்போது பார்ப்போம்.

  • அரியலூர் 1792
  • செங்கல்பட்டு 20911
  • சென்னை 116650கோவை 8967
  • கடலூர் 6690தர்மபுரி 1009
  • திண்டுக்கல் 4755
  • ஈரோடு 1445
  • கள்ளக்குறிச்சி 4919காஞ்சிபுரம் 13876
  • கன்னியாகுமரி 7492
  • கரூர் 1012கிருஷ்ணகிரி 1658
  • மதுரை 12764
  • நாகப்பட்டினம் 1570
  • நாமக்கல் 1221
  • நீலகிரி 1057
  • பெரம்பலூர் 938
  • புதுக்கோட்டை 4177
  • ராமநாதபுரம் 4015
  • ராணிப்பேட்டை 8358
  • சேலம் 5917
  • சிவகங்கை 3374
  • தென்காசி 3905
  • தஞ்சாவூர் 4888
  • தேனி 9909
  • திருப்பத்தூர் 2013
  • திருவள்ளூர் 19870
  • திருவண்ணாமலை 8720
  • திருவாரூர் 2319
  • தூத்துக்குடி 9964
  • திருநெல்வேலி 7522
  • திருப்பூர் 1531
  • திருச்சி 5867
  • வேலூர் 8498
  • விழுப்புரம் 5248
  • விருதுநகர் 11183
    • விமான நிலைய கண்காணிப்பில் 875
    • (வெளிநாடு)

      • விமான நிலைய கண்காணிப்பில் 748
      • (உள்நாடு)

        • ரயில் நிலைய கண்காணிப்பில்: 428

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+