தமிழகத்தில் உங்கள் மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா.. எங்கு மோசமான பாதிப்பு.. விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 64 பேர் பேருக்கு கொரோனாப தொற்று ஏற்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1855 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே இன்று அதிகபட்சமாக சென்னையில் 28 பேருக்கும், மதுரையில் 15 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரத்தை இப்போது பார்ப்போம்.

தமிழகத்திலேயே இன்று அதிகபட்சமாக சென்னையில் 28 பேருக்கும், மதுரையில் 15 பேருக்கும். விருதுநகரில் 7 பேருக்கும், நாமக்கல் மற்றும் விழுப்புரத்தில் தலா நான்கு பேருக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் திருப்பூரில் இரண்டு பேருக்கும், திருவள்ளூர், ராமநாதபுரம்,. சிவகங்கை, சேலம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. மாவட்ட வாரியாக எங்கு எத்தனை பேருக்கு பாதிப்பு என்பதை பார்ப்போம்.

கோவையில் 141

கோவையில் 141

சென்னையில் 523 பேருக்கும், கோவையில் 141 பேருக்கும், திருப்பூரில் 112 பேருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தில் 80 பேருக்கும், ஈரோட்டில் 70 பேருக்கும், மதுரையில் 75 பேருக்கும், திருநெல்வேலியில் 63 பேருக்கும், நாமக்கல்லில் 59 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் 53

திருவள்ளூர் 53

செங்கல்பட்டு மாவட்டத்தில் 58 பேருக்கும், தஞ்சாவூரில் 55 பேருக்கும், திருவள்ளூரில் 53 பேருக்கும் திருச்சியில் 51 பேருக்கும், விழுப்புரத்தில் 47 பேருக்கும். நாகப்பட்டினத்தில் 44 பேருக்கும், தேனியில் 43 பேருக்கும், கரூரில் 42 பேருக்கும், தென்காசியில் 38 பேருக்கும், ராணிப்பேட்டையில் 39 பேருக்கும், விருதுநகரில் 32 பேருக்கும், சேலத்தில் 31 பேருக்கும் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் நிலவரம்

வேலூர் நிலவரம்

திருவாரூரில் 29 பேருக்கும், கடலூரில் 26 பேருக்கும், தூத்துக்குடியில் 27 பேருக்கும், வேலூரில் 22 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 19 பேருக்கும், கன்னியாகுமரியில் 16 பேருக்கும், திருப்பத்தூரில் 18 பேருக்கும், திருவண்ணாமலையில் 15 பேருக்கும், ராமநாதபுரத்தில் 15 பேருக்கும் சிவகங்கையில் 12 பேருக்கும், நீலகிரியில் 9 பேருக்கும் பெரம்பலூரில் 7 பேருக்கும, அரியலூரில் 6 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 6 பேருக்கும், தருமபுரி, புதுக்கோட்டையில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இதுவரை ஏற்பட்டுள்து. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு இல்லை.

Recommended Video

    முழு ஊரடங்கால் முடங்கிய தமிழகத்தின் முக்கிய நகரங்கள் - வீடியோ
     7 மாவட்டங்கள்

    7 மாவட்டங்கள்

    15 நோயாளிகளுக்குள் உள்ள பகுதிகள் ஆரஞ்சு மண்டலம் என மத்திய அரசு வகைப்படுத்தி உள்ளது. அந்த லிஸ்டில் தற்போது சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி ஆகியவை உள்ளன. பெரம்பலூரில் 7 பேருக்கே கொரோனா இருந்த போதிலும் வேகமாக அதிகரிப்பால் சிவப்பு மண்டலமாக உள்ளது. இதேபோல் 8 மாவட்டங்களை தவிர அனைத்து மாவட்டங்களும் கொரோனா வைரஸ் அதிகம் பரவக்கூடிய சிவப்பு மண்டலமாகவே தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தில் கொரோனா குணமாகும் விகிதம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதுவரை 1020 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 838 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+