உடனே வீட்டில் இந்த கருவியை பொருத்துங்க! தமிழ்நாடு முழுக்க மின்சார வாரியம் அனுப்பிய மெசேஜ்.. கவனம்
சென்னை; தமிழ்நாட்டில் சமீபத்திய மழையினால் மின்சாரம் தாக்கி சில உயிரிழப்புகள் ஏற்பட்டதால், பாதுகாப்புக்காக எர்த் லீகேஜ் சர்க்யூட் பிரேக்கர்களை (ELCBs) நிறுவுமாறு தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களை வலியுறுத்தி உள்ளது.
கடந்த அக்டோபர் 15 அன்று, மின் கசிவு காரணமாக இரண்டு மரணங்கள் தமிழ்நாட்டில் பதிவானது. இது போன்ற மரணங்களை ELCBகள் மூலம் தடுக்க முடியும். வெறும் ரூ.2000க்கு இந்த கருவிகளை நிறுவ முடியும். கீசர்கள், வெட் கிரைண்டர்கள் மற்றும் இரும்புப் பெட்டிகள் போன்ற பொதுவான சாதனங்கள் சரியான பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தான மின்னோட்டத்தை உருவாக்கலாம்.

பாதுகாப்புக்காக எர்த் லீகேஜ் சர்க்யூட் பிரேக்கர்களை (ELCBs) நிறுவுமாறு தமிழ்நாடு மின்சார வாரியம் மக்களை வலியுறுத்தி உள்ளது.
ஆர்சிடி கருவி: ஆர்சிடி கருவி தொடர்பாக தமிழக மக்களுக்கு மின்சார வாரியம் முக்கியமான எச்சரிக்கை, ஆலோசனை ஒன்றை வழங்கி உள்ளது. வீடுகளில் சிறிய பாதுகாப்பு கருவி ஒன்றை பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் Tangedco சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
RCD உயிரை காக்கும். கட்டிடத்தின் உள் மின் இணைப்புகளில் ஏற்படும், பழுதுகளில் இருந்து சிறிதளவு மின் கசிவு இருந்தாலும் #RCD மின்னோட்டத்தை நிறுத்தி விடும் மழைக்காலம் வரும் முன் உங்கள் வீட்டில் மின் திறனாளரைக் கொண்டு 30mA RCD பொருத்துங்கள், என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
அதன்படி நம் வீடுகளில் RCD பொருத்துவது, நமது அன்புக்குரியவர்களின் உயிர்களைக் காப்பாற்றுகிறது! இந்த சிறிய அக்கறை மின்சார வீடுகளில் மின் விபத்துகளைத் தடுக்கும். வீடு நமது அன்பின் கூடு, அதனை RCD-யுடன் பாதுகாப்போம், என்று தமிழ்நாடு மின்சார வாரியம் Tangedco சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அதெல்லாம் சரி அது என்ன ஆர்சிடி கருவி.. சின்ன வயதில் எஸ்பிடி எமர்ஜென்சி கேள்வி பட்டு இருக்கிறோம்.. இது என்ன கருவி என்று நினைக்கிறீர்களா. விளக்கம் இதோ
ஆர்சிடி என்றால் என்ன? ஏன் பொருத்த வேண்டும்?: எஞ்சிய மின்னோட்டம் சாதனம் (ஆர்சிடி) என்பது ஒரு பாதுகாப்பு சாதனம் ஆகும். இது மின்சார ஓட்டத்தில் ஏதேனும் தவறு இருந்தால் தானாகவே மின்சாரத்தை அணைக்கும் திறன் கொண்டது ஆகும். RCDகள் சாதாரண உருகிகள் மற்றும் சர்க்யூட் பிரேக்கர்களை விட அதிக உணர்திறன் கொண்டவை. அதாவது வீட்டில்தான் பியூஸ் இருக்கிறேதே என்று சொல்ல வேண்டாம்.
இது பியூஸை விட வேகமானது. அதோடு திறன் கொண்டது. மின்சார அதிர்ச்சிக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பை வழங்குகின்றன. இதனால் உங்களுக்கு ஷாக் அடிப்பதை தவிர்க்கலாம்
ஒரு RCD மூலம் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு மின்சார ஓட்டம் தவறான நேரங்களில் தடுக்கப்பட்டு உயிர்காக்க முடியும். RCD கருவி பொதுவாக மின்சார சர்க்யூட் எனப்படும் சுற்றுடன் பாயும் மின்சாரத்தை தொடர்ந்து கண்காணிக்கும்.
உதாரணமாக.. நீங்கள் மின்சார வயரை தொடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.. நேரடியாக மின்சார பகுதியை தொட்ட நபரின் வழியாக, திட்டமிடப்படாத பாதையில் மின்சாரம் பாய்வதைக் கண்டறிந்தால், அது மின்சுற்றை மிக விரைவாக அணைத்துவிடும். இதனால் இறப்பு அல்லது கடுமையான காயம் ஏற்படும் அபாயத்தைக் கணிசமாகக் ஆர்சிடி குறைக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications