பிரசாந்த் கிஷோர் சொன்ன ஒற்றை வார்த்தை.. அப்படியே ஃபாலோ செய்த விஜய்.. தவெக வெற்றியின் ரகசியம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. முதல் தேர்தலிலேயே விஜய்யின் இந்த எழுச்சி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சொன்னதை விஜய் அப்படியே பாஃலோ செய்து வெற்றியை அறுவடை செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக வேட்பாளர்கள் 57 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளவர்கள். திமுக வேட்பாளர்கள் 48 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர்கள் 5 தொகுதிகளிலும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விசிக வேட்பாளர்கள் தலா 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.
இந்நிலையில் தான், தவெகவின் வெற்றியை பிரபல தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் கடந்த ஆண்டே கணித்து கூறியிருந்தார். பீகாரில் கடந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது பிரசாந்த் கிஷோர் கட்சி போட்டியிட்டது. இந்த சமயத்தில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அவரிடம் பேட்டி எடுத்தது.
அப்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பற்றி கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பிரசாந்த் கிஷோர், ''தமிழகத்தில் தவெக தனித்து களமிறங்க வேண்டும். இது மாற கூடாது. இது நடந்தால் அவர் நல்ல வெற்றி பெறுவார்'' என்றார். அதற்கு அவரிடம் ''வெற்றி என்றால் எந்த மாதிரியான வெற்றி? ஆட்சி அமைப்பதற்கான 118 தொகுதிகளில் வெற்றி பெற முடியுமா?'' என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரசாந்த் கிஷோர், ''ஆம், இந்த வீடியோவை வைத்து கொள்ளுங்கள். ரிசல்ட் வெளிவரும்போது இந்த வீடியோவை ப்ளே பண்ணுங்கள்'' என்று கூறினார்.
இதன்மூலம் விஜய் தனித்து போட்டியிட்டால் வெற்றி நிச்சயம் என்று அவர் கூறியிருந்தார். தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து களமிறங்கிய நிலையில் ஆட்சியை பிடிக்கும் வகையில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
-
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட் -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்! -
கும்பகோணத்தில் “காவலர் தேவநாதன் கையை முறித்த த.வெ.க.வினர்” என்ற செய்தியே தவறு.. காவல்துறை விளக்கம் -
அரசு மருத்துவமனையில் தந்தையை அனுமதித்து இரவு முழுவதும் தங்கிய அமைச்சர் மதன் ராஜாவுக்குப் பாராட்டு












Click it and Unblock the Notifications