மின்வாரியம் அதிரடி.. 13 வருடத்துக்கு பிறகு ஹேப்பி நியூஸ்.. மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. இனி நிம்மதி
சென்னை: மின் வாரியம் மூன்றாக பிரிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்த கூடுதல் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பணியாளர்களின் பணி பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
தமிழக மின்வாரியத்திற்கு நிறைய கடன் சுமைகள் இருக்கின்றன.. இதைத்தவிர, இன்னும் பல்வேறு சிக்கல்களால் Tangedcoவின் கடன் சுமை 1.6 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது..

எனவே, Tangedcoவின் நிதிநிலைமையை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் இன்று ஏற்பட்டுள்ளது. அதனால்தான், Ernst and Young என்ற பன்னாட்டு ஆலோசனை நிறுவனம் 2021ல் பணியமர்த்தப்பட்டது...
மின்வாரியம்: இந்த நிறுவனமானது, Tangedoவின் செயல்பாடுகளையும், நிதி நிலைமையையும் ஆராய்ந்து, Ernst and Young, நிலைமையை சீர் செய்ய பல்வேறு பரிந்தரைகள் அடங்கிய அறிக்கையையும் சமர்ப்பித்தது.
அப்போது, Tangedcoவை மூன்று நிறுவனங்களாக பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.. அதாவது, மின் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றும், மின் விநியோக பணிகளுக்கான தனி நிறுவனமும், புதுபிக்கத்தக்க ஆற்றல் பணிகளுக்காக தனி நிறுவனமும் என 3 ஆக உருவாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேம்பாட்டு நிறுவனம்: அதன்படி இவைகளில், சூரிய சக்தி, காற்றாலைகள், பையோ கேஸ் மூலமான மின் உற்பத்திகளை ஊக்கப்படுத்தும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் மூன்றாவது நிறுவனத்துடன் இணைக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் கடன் சுமை 3ஆக பிரிக்கப்பட்டு, ஒரு தனி நிறுவனத்தின் கடன் சுமை குறைந்த அளவில் இருக்கவும் வகை செய்யப்படுகிறது.
அதுமட்டுமல்ல, கடன் சுமை அதிகமாக உள்ளதால், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் 11 சதவீதம் வட்டி விதிப்பதாக Tangedco அதிகாரிகள் சொல்கிறார்கள்.. ஒருவேளை கடன்சுமை 3ஆக பிரிக்கப்பட்டால், வட்டி விகிதம் மேலும் குறையும். குறைந்த வட்டியில் புதிய கடன்களை வாங்க முடியும் என்று நம்பப்படுகிறது..
மின்வாரியம்: மேலும், மின்வாரியம் 3 ஆக பிரிக்கப்பட்டால், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி தலைவர்கள் நியமிக்கப்பட்டு, அவற்றின் செயல் திறன் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இப்படி மின்வாரியத்தை 3ஆக பிரிக்க, தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அதேபோல, கடந்த 2010ல், மின் வாரியம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் என்று 3 நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட நிலையில், மின் வாரியத்தின் ஒட்டு மொத்த சொத்துக்களும், பணியாளர்களும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனியே பிரிக்கப்பட வேண்டும். இதுவரை அவ்வாறு பிரிக்கப்படவில்லை. இந்நிலையில், 13 வருடங்களுக்கு பிறகு, முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு அரசு அனுமதி இருக்கிறதாம்.
ஓய்வூதியம்: மின் வாரிய அதிகாரிகள் இதுகுறித்து, சொல்லும்போது, "மின்வாரியம் 3ஆக பிரிக்கப்பட்டபோதே, அரசுக்கு ஒரு பரிந்துரை வழங்கப்பட்டது.. அதன்படி, தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, சம்பளம், ஓய்வூதியம் உள்ளிட்ட பணியாளர்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்கு பொறுப்பேற்பதாக, தமிழக அரசு உத்தரவாதம் தர வேண்டும். தமிழக அரசு, மின் வாரியம் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே முத்தரப்பு ஒப்பந்தமும் கையெழுத்தாக வேண்டும்.
ஆனால், முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு அரசு அனுமதி தராமல் இருந்த நிலயல், இப்போது 13 வருடங்களுக்கு பிறகு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், பணியாளர்களின் பணி பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம் கிடைக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மகிழ்ச்சி: முத்தரப்பு ஒப்பந்தம் குறித்த முடிவை எடுக்காத நிலையில், மின்வாரிய சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்த நிலையில் 13 வருடங்கள் கழித்து, தற்போது தீர்வு எட்டப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications