தமிழக அமைச்சர் காமராஜூக்கு கொரோனா தொற்று உறுதி - தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காமராஜ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை : தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜூக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அமைச்சர் காமராஜ் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 9 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 95 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் பல லட்சம் பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டாலும் அதில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவிற்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் பாதிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் எம்எல்ஏக்களில் முதன்முதலாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்தார். அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன், நிலோபர் கபீல் ஆகியோரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகினர். மொத்தம் 16 எம்.எல்.ஏக்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
தற்போது உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அமைச்சர் காமராஜ் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications