தமிழ்நாடு மோசமான தலைவரால் சீரழிகிறது.. முதல்வர் ஸ்டாலினை தாக்கிய ஜேபி நட்டா! பரபர குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மக்கள் கடும் உழைப்பாளிகள். ஆனால் தமிழகம் மிகமோசமான தலைவரை பெற்றுள்ளது. திமுக தலைமையிலான ஆட்சியில் தமிழகம் சீரழிந்து வருகிறது என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கடுமையாக விமர்சனம் செய்தார்.

சென்னை துறைமுகம் தொகுதியில் பாஜக சார்பில் என் மண் என் மக்கள் யாத்திரை இன்று நடந்தது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பங்கேற்றார்.

Tamil Nadu got Worst Leadership, JP Nadda attacks CM MK Stalin lead DMK Government

அதன்பிறகு அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் ஜேபி நட்டா பங்கேற்று பேசினார். அப்போது அவர் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தார். ஜேபி நட்டா பேசியதாவது:

தமிழகம் பாஜக தலைவர்களின் இதயத்தில் உள்ளது. குறிப்பாக பிரதமர் மோடியின் மனதில் தமிழகம் மிகவும் நெருக்கமாக உள்ளது. உலகின் எந்த பகுதிக்கு சென்றாலும் தமிழ் மொழி, தமிழ் புலவர் பற்றி பேசாமல் பிரதமர் மோடி இருந்தது இல்லை. தமிழகத்தின் பெருமையான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவி நீதி, நேர்மை, சிறந்த ஆட்சிக்கான அடையாளமாக பிரதமர் மோடி மாற்றி உள்ளார்.

தமிழ்நாட்டின் மகன் எம்எஸ் சுவாமிநாதனுக்கு பிரதமர் மோடி பாரத ரத்னா விருது அறிவித்துள்ளார். இவர் பசுமை புரட்சி மட்டுமின்றி, உணவு புரட்சி மட்டுமின்றி இன்று உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறுவதற்கு காரணமாக இருந்தவர். தமிழ்நாடு என்றால் கலாசாரம், பண்பாடு, பழமையான மொழி குறித்து பெருமை கொள்கிறோம். தமிழ்நாட்டின் சாதுக்கள், சன்னியாசிகள், தலைவர்கள் பற்றி பெருமை கொள்கிறோம்.

தமிழ்நாடு கலை, இலக்கியம், தொழில்நுட்ப துறைகளில் மறக்க முடியாத சாதனைகளை செய்கிறது. தமிழர்கள் கடும் உழைப்பாளிகள்; ஆனால் தமிழகம் மோசமான தலைவரை பெற்றுள்ளது. திமுக தலைமையிலான ஆட்சியில் தமிழகம் சீரழிந்து வருகிறது'' என கடுமையாக விமர்சனம் செய்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+