Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொட்டாலே உதிருதா சென்னை மூலக்கொத்தளம் அடுக்குமாடி வீடுகள்.. பரவும் வீடியோ.. தமிழக அரசு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மூலக்கொத்தளத்தில் புதியதாக கட்டப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளின் தரம் தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி விமர்னங்களை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு,, மூலகொத்தளம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் உள்ள பழுதுகள் நீக்கப்பட்டு, நல்ல நிலையில் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள மூலக்கொத்தளம் சுடுகாட்டை ஒட்டி உள்ள ராம்தாஸ் நகர், பிரிவில் தோட்டம் பகுதியில், 200க்கும் மேற்பட்டோர் குடிசை வீடுகளில் வசித்து வந்த மக்களுக்கு அரசு அடுக்குமாடி கட்டித்தர முடிவு செய்தது. இதன்படி மூலக்கொத்தளம் சுடுகாட்டிற்கு உள்ள 35 ஏக்கர் நிலத்தில் மயானத்திற்கான 23 ஏக்கர் நிலம் போக, காலியாக இருந்த 12 ஏக்கர் நிலத்தில், பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், 138.29 கோடி ரூபாய் செலவில், 13 மாடியில் 1,044 வீடுகள் கட்டித்தரப்பட்டது. கடந்த 2018ல், அ.தி.மு.க., ஆட்சியில் தொடங்கிய இப்பணி 2020ல் முடிந்தது. எனினும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக அனுமதி தரவில்லை..

chennai apartment

தனிடையே திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுத்தது. அதன்பின்னர் சிஎம்டிஏவும் அனுமதி கொடுத்தது. அதன்பின்னர் குடிநீர், கழிவுநீர், மின்சார இணைப்புகள், மின்துாக்கி, சுற்றுச்சுவர் வசதிகள் அமைக்கப்படடன. இந்த கட்டடத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் 2023 ஜூலையில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். எனினும் மக்கள் உடனடியாக குடியேறவில்லை.. குடியிருப்பில் ஒவ்வொரு பயனாளிக்கும் வசூலிக்கும் 4.70 லட்சம் ரூபாய்க்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும், அதிகபட்சம் 1.50 லட்சம் ரூபாய் மட்டுமே தங்களால் வழங்க முடியும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தினர். அதை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஏற்றது.

அதன்பின்னர் பொதுமக்கள் படிப்படியாக குடியேறினார்கள். இந்நிலையில் கட்டடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. கட்டிடத்தை திறந்து ஒரே ஆண்டிலேயே, கையால் தொட்டாலே உதிரும் அளவிற்கு சிமென்ட் பூச்சு இருப்பதாகவும். பி.வி.சி.,யில் போடப்பட்ட ஜன்னல், கதவுகள் உடைந்துவிட்டது என்றும், பல வீடுகளில் கதவுகளே பொருத்தப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.காங்ரீட் வழியாக மழைநீர் கசிவதாகவும், மின் ஒயர்கள் ஆபத்தான முறையில் உள்ளதாகவும், 'லிப்ட்' பழுதடைந்துவிடுவதாகவும் குடியிருப்பின் நிலை மோசமாக உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகியது. இந்த நிலையில், மூலகொத்தளம் குடியிருப்பு தொடர்பாக தமிழக அரசு அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது.

அதில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் மூலகொத்தளம் திட்டப்பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு அனைத்து மேம்பாட்டு வசதிகளுடன் கூடிய 1,035 குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு, 2021-ம் ஆண்டு பணிகள் நிறைவடைந்தன. தகுதியுள்ள பயனாளிகள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு, விடுபட்ட சில சிறு பணிகளும் முடிக்கப்பட்டு 2023-ம் ஆண்டு குடியமர்த்தும் பணி தொடங்கப்பட்டது.

இந்த திட்டப்பகுதியில் 11 தளங்களுடன் 9 கட்டிட தொகுப்புகளாக 1,035 குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த குடியிருப்புகள் மின்தூக்கி வசதி, மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, தீயணைப்பான், மின் ஆக்கி, இடிதாங்கி, பாதாள சாக்கடை வசதி, மின்சார வசதி, மழைநீர் வடிகால் வசதி, கான்கீரிட் சாலை மற்றும் மழைநீர் சேமிப்பு போன்ற அடிப்படை வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் நவீன கட்டுமான தொழில்நுட்பமான 'மிவான்' தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டதாகும்.

கடந்த 2 ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்படாத குடியிருப்பு பகுதிகளில், அங்குள்ள சமூக விரோதிகளால் குடியிருப்புகளில் உள்ள மின்வயர்கள், மின்தூக்கி உபகரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் குழாய்கள், ஜன்னல்கள், கதவுகள், சுவிட்சுகள் சேதப்படுத்தப்பட்டு திருடப்பட்டன. இது தொடர்பாக 'எச்1' வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, போலீசாரால் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு குடியிருப்புகளின் உட்கட்டமைப்பு வசதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தற்போது பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு செய்யும் பொழுது சேதப்படுத்தப்பட்ட குடியிருப்புகளில் உட்கட்டமைப்பு வசதிகள் சரிசெய்யப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் வாரியத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 554 குடும்பங்களுக்கு குடியிருப்புகளில் உள்ள பழுதுகள் சரிசெய்யப்பட்டு, நல்ல நிலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. புதிதாக வரும் பயனாளிகளுக்கு பழுதுகள் சரிசெய்யப்பட்டு குடியிருப்புகள் வழங்கப்பட்டு வருகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+