ஆபாச நடனம்.. அவமரியாதை..கோவில் திருவிழாக்களில் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தமிழக அரசு தடை
குறவன், குறத்தி ஆட்டம் நாளடைவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் சேர்க்கப்பட்டு ஆபாசமாக ஆடப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டினை அடுத்து கோவில் திருவிழாக்களில் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தமிழக அரசு தடை விதிப்பு.
சென்னை: கோவில்களிலும் திருவிழாக்களிலும் குறவன், குறத்தி நடனமாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மார்ச் 10-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நரிக்குறவர் நடனம் என்பது கிராமங்களில் இன்றைக்கும் விழாக்களில் இடம்பெறுகிறது. தமிழ்நாட்டில் வசதிபடைத்தவர்கள், வியாபாரிகள், விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீடுகளில் பெரியவர்கள் யாராவது உயிரிழந்து விட்டால் குறவன் குறத்தி நடனம் ஆடுவது வழக்கம். அந்த நடனத்தின் போது உயிரிழந்தவரின் பெருமைகளை சொல்லி பாடலாக பாடுவார்கள்.

சில நேரங்களில் கோவில்களில் ஆடப்படும் குறவன் குறத்தி நடனங்களில் அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டு ஆபாச நடனங்களை ஆடுவது அதிகரித்து வருகிறது. அதே போல இரட்டை அர்த்த வசனங்களுடன் கூட ஆபாச பேச்சுக்களை காமெடி என்ற பெயரில் பேசி முகம் சுளிக்க வைப்பார்கள். எனவே இதுபோன்ற ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குறவன், குறத்தி ஆட்டம் நாளடைவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் சேர்க்கப்பட்டு ஆபாசமாக ஆடப்படுவதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளதாக அறிய வந்ததை அடுத்து நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மார்ச் 10ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications