Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள்.. புலம்பும் பயணிகள்! புகார் எண்களை அறிவித்த அரசு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 14.10.2025 முதல் 21.10.2025 வரையில் தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு விழாக்காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை ஆய்வு செய்து தணிக்கை அறிக்கை மூலம் உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், அதிக கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் பேருந்துகள் மீது புகார் கொடுக்க உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் தயாராகி வருகிறார்கள். இதனால் வழக்கம் போல் இந்த ஆண்டும் ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. அரசு சார்பில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

14.10.2025 முதல் 21.10.2025 வரையில் தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு விழாக்காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை ஆய்வு செய்து தணிக்கை அறிக்கை மூலம் உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பாக தமிழக அரசு சில நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதோடு, புகார் எண்களையும் அறிவித்துள்ளது.

Tamil Nadu government Omni bus Diwali

தமிழ்நாடு அரசு

இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," போக்குவரத்து ஆணையர் அவர்களின் அறிவுரையின் படி கீழ் காணும் வரன்முறைகளை பின்பற்றும்படி அனைத்து சரக இணைப்போக்குவரத்து ஆணையர்கள் /துணைப்போக்குவரத்து ஆணையர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எதிர்வரும் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை நாட்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. அரசு பேருந்துகள் மற்றும் அரசு விரைவு பேருந்துகள் செல்ல சுங்கச்சாவடியில் தனி வழி (Separate Bay) அமைக்க சுங்க சாவடி அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சீரான வாகன போக்குவரத்தினை உறுதிசெய்ய தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தீபாவளி பேருந்து கட்டணம்

மோட்டார் வாகன ஆய்வாளர்களை சுங்க சாவடிகளில் பணியமர்த்தி அரசு பேருந்துகள் விரைவாக சுங்கசாவடியை கடந்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு சுங்கச்சாவடிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், பணியின் போது தமிழ்நாடு மற்றும் பிற மாநில ஆம்னி பேருந்துகளையும் ஆய்வு செய்து உரிய வரி மற்றும் ஆவணங்கள் நடப்பில் உள்ளதா என்பதை கண்டறிந்து, குறைபாடுடைய வாகனங்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புகார் எண்கள்

பயணிகள் கூடுதல் கட்டணம் மற்றும் பிற புகார்களுக்கு கீழ்காணும் எண்கள் மூலம் தொலைப்பேசி வாயிலாகவோ, வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவாகவோ புகார் தெரிவிக்க வேண்டப்படுகிறது.

1. போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம், சென்னை - 1800 425 5161
2. இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (வடக்கு) -97893 69634
3. இணைப்போக்குவரத்து ஆணையரகம், சென்னை (தெற்கு)-93613 41926
4. இணைப்போக்குவரத்து ஆணையரகம், மதுரை-90953 66394
5. இணைப்போக்குவரத்து ஆணையரகம், கோயம்புத்தூர்-93848 08302
6. துணைப்போக்குவரத்து ஆணையரகம், விழுப்புரம்-96773 98825
7. துணைப்போக்குவரத்து ஆணையரகம், வேலூர்-98400 230118
8. துணைப்போக்குவரத்து ஆணையரகம், சேலம்-78456 36423
9. துணைப்போக்குவரத்து ஆணையரகம், ஈரோடு-99949 47830
10. துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருச்சிராப்பள்ளி-90660 32343
11. துணைப்போக்குவரத்து ஆணையரகம், விருதுநகர்-90257 23800
12. துணைப்போக்குவரத்து ஆணையரகம், திருநெல்வேலி-96981 18011
13. துணைப்போக்குவரத்து ஆணையரகம், தஞ்சாவூர்-95850 20865

மேலும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல், போக்குவரத்து துறையின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கையினை தவிர்க்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்." என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+