தமிழக அரசு ஊழியர்களுக்கு வருது குட்நியூஸ்?.. விரைவில் சம்பளம் உயர்வு அறிவிப்பு? கோட்டைக்கு கோரிக்கை
சென்னை: பண்டிகைகள் நெருங்கி வரும்சூழலில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி எப்போது வழங்கப்படும் என்ற கேள்வியும் ஆர்வமும் வலுத்து வருகிறது.
நீண்ட நாட்களாகவே, மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 3 மாத காலமாகவே, இந்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு ஊழியர்கள் எதிர்நோக்கி காத்திருந்தார்கள்.

அகவிலைப்படி உயர்வு: விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது நல்ல செய்தி வெளியாகலாம் என்றார்கள்.. பிறகு ஆயுதபூஜைகள் வருவதால், அதற்கு முன்பேயே அகவிலைப்படி உயர்வு வெளியாகும் என்றார்கள்.. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பே, அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்திருந்தார்-
இது தொடர்பாக அவர் சொல்லும்போது, "மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் மூலம், 42 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்கிறது. இதன்மூலம், நாடு முழுவதும் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன் பெற இருக்கிறார்கள்.
ஓய்வூதியதாரர்கள்: விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.
இதேபோல், கெஜட்டட் அல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளத்தை போனஸாக வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக 11.07 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள்" என்று அனுராக் தாக்குர் தெரிவித்திருந்தார்.
பெருத்த மகிழ்ச்சி: இந்த அறிவிப்பானது, மத்திய அரசு ஊழியர்களுக்கு பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுபோலவே, தமிழக அரசு ஊழியர்களும் அகவிலைப்படி உயர்வை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ஏற்கனவே, தங்களது கோரிக்கைகளை பரிசீலிக்கவில்லை என்று அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.. அவ்வப்போது போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்கள்.
இப்போது மத்திய அரசுக்கு அகவிலைப்படி அறிவித்துள்ளதுபோல், தங்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம் த்மிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அறிக்கை: தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.மதுரம், அகில இந்திய தலைவர் கே.கணேசன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் உள்ளதாவது:
"தமிழக அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்கள், ஓய்வூதியர்கள் அனைவருக்கும் மத்திய அரசு வழங்கியது போல 4 சதவிகித அகவிலைப்படி உடனடியாக வழங்க வேண்டும் என முதலமைச்சர்மு.க.ஸ்டாலினை அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
எதிர்பார்ப்பு: ஏற்கனவே, போக்குவரத்து துறை ஊழியர்கள், தங்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், இதுகுறித்து தங்களை அழைத்து பேச வேண்டும் என்று அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ள நிலையில், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கான கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால், இதுகுறித்து திமுக அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications