தமிழகத்தில் முழு ஊரடங்கை கண்காணிக்க.. மாவட்டம் வாரியாக அமைச்சர்கள் நியமனம்!
சென்னை: தமிழகத்தில் முழு ஊரடங்கை கண்காணிக்க மாவட்டம் வாரியாக அமைச்சர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த திங்கள்கிழமை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த ஊரடங்கு தொடர்பா நாளை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.

ஊரடங்கு கண்காணிப்பு
இந்த நிலையில் ஊரடங்கை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமைச்சர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஊரடங்கை கண்காணிப்பது, தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்துவது போன்றவற்றை அமைச்சர்களின் முக்கிய பணியாக இருக்கும் என்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருக்கிறது.

சென்னைக்கு மா.சுப்பிரமணியன்
சென்னைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உரடங்கை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளார்கள்.மாவட்டம் வாரியாக ஊரடங்கை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் பின்வருமாறு:- செங்கல்பட்டு மாவட்டம் - தா.மோ.அன்பரசன், மதுரை மாவட்டம் பழனிவேல் தியாகராஜன், சேலம் மாவட்டம் - செந்தில்பாலாஜி,

தூத்துக்குடி-நெல்லை
திருப்பூர் மாவட்டம் - மு.பபெ.சாமிநாதன், கோவை மாவட்டம் - அமைச்சர்கள் சக்கரபாணி, க.ராமச்சந்திரன், தூத்துக்குடி மாவட்டம் - அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், திருச்சி மாவட்டம் - கே.என்.நேரு, திருநெல்வேலி மாவட்டம் - தங்கம் தென்னரசு, ஈரோடு மாவட்டம் - முத்துசாமி, காஞ்சிபுரம் மாவட்டம் - ஏ.வ.வேலு,

வேலூருக்கு துரைமுருகன்
வேலூர் மாவட்டம் - துரைமுருகன், விழுப்புரம் மாவட்டம் - பொன்முடி, கடலூர் மாவட்டம் - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டம் - மெய்யநாதன், கிருஷ்ணகிரி மாவட்டம் - ஆர்.காந்தி, தஞ்சாவூர் மாவட்டம் - அன்பில் மகேஷ், தேனி மாவட்டம் - ஐ.பெரியசாமி, கன்னியாகுமரி மாவட்டம் - மனோ தங்கராஜ் என அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications