தமிழகத்தில் அரசு பள்ளிகள்.. சட்டென அறிவித்த பள்ளிக்கல்வி துறை.. ஆசிரியர் பணியில் சேர்வதில் சிக்கலா?
சென்னை: தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேருவதில், புதிய சிக்கல்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.. காரணம், பள்ளிக்கல்வித்துறை திடுதிப்பென்று சில திருத்தங்களை செய்து உத்தரவிட்டுள்ளது. என்ன அது?
தமிழகத்தில் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதே பலருக்கும் கனவாக இருந்து வருகிறது. அதிலும், ஆசிரியர் பணி என்றாலே எல்லா காலத்திலுமே கூடுதல் மவுசு இருந்தே வருகிறது.

ஆசிரியர் பணி: ஆசிரியர் பணி நியமனத்தை பொறுத்தவரை, தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், பணி விதிகள் சட்டம் அமலில் உள்ளது.. அதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும், இடைநிலை ஆசிரியர், 6 முதல் 8ம் வகுப்பு வரை பணியாற்றும் நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர், 6 முதல், 10ம் வகுப்பு வரை பணியாற்றும் உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர், பிளஸ் 2 வரை பாடம் நடத்தும், முதுநிலை ஆசிரியர் என்று தனித்தனியாக பதவிகள் உருவாக்கப்பட்டு, அவை நடைமுறையிலும் இருந்து வருகின்றன.
இதில், 1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு, பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்புடன் தொடக்க கல்விக்கான டிஎல்எட் அல்லது பிஎல்எட் அல்லது பிஎட் படிப்பு முடித்தவர்கள், தகுதி பெறுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தொடக்க கல்விக்கான டிஎல்எட் அல்லது பிஎல்எட் அல்லது பிஎட் படிப்பு முடித்தவர்கள், தகுதி பெறுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
பட்டப்படிப்பு: ஆனால், பட்டப்படிப்புடன், பிஎட் படித்தவர்கள் தகுதி பெறுவர் என்ற விதியை, தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை நீக்கிவிட்டது.. அதற்கு பதிலாக, புதிய அரசாணையை பிறப்பித்திருக்கிறது. அந்த அரசாணையில் உள்ளதாவது
தமிழகத்தில் தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி விதிகளில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்புடன் டி.எல்.எட்., அல்லது பி.எல்.எட்., அல்லது பி.எட்., படிப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திருத்தங்கள்: இது மட்டுமல்லாமல், ஆசிரியர் தகுதித்தேர்வின் (TET) முதல் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட தகுதியினை பெற்றிருந்தால் மட்டுமே ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது, ஆசிரியர் பணியில் எளிதில் சேர முடியாத சூழலை ஏற்படுத்தி விடும் என்பதுடன், பிஎட்., படித்த பட்டதாரிகள் கூட தொடக்க கல்வி டிப்ளமா படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications