அசத்தல் அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு.. பள்ளிக்கல்வித்துறை தந்த அதிரடியை பாருங்க
சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது. இந்த தகவலானது, பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியையும் உண்டுபண்ணி வருகிறது.
பள்ளி மாணவர்களின் நலனுக்காகவும், மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும், தமிழக அரசு எத்தனையோ நலத்திட்டங்களையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு செயல்படுத்தியும் வருகிறது.

இதனால், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நாட்டில் உள்ள முதன்மை உயர் கல்வி நிறுவனங்களுக்கு கல்வி கற்கச் செல்வது அதிகரித்துள்ளது.
ஆரம்பப்பள்ளிகள்: அதேசமயம் பல இடங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறைகள் நிலவுகின்றன.. இதனால், மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.. ஆரம்பப் பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை இந்த நிலைமை நீடிக்கிறது.. நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை கிட்டத்தட்ட 38 ஆயிரம் அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன... இதில், மேல்நிலைப் பள்ளிகளில் 1000 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
பட்டதாரிகள்: அதேபோல, அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 1000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன.. நடுநிலைப்பள்ளிகளிலும், நிறைய ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளது. தொடக்கப் பள்ளிகளில் 2000 ஆசிரியர் பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ளன... இப்படி ஏராளமான ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதால், பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வேலைப்பளுவும் அதிகரித்துவிடுகிறது.
இதனால் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதிலும் சிக்கல் எழுகிறது. இப்படிப்பட்ட சூழலில், இந்த குறைகளை களைய தமிழக அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.. அதன்படி, 6000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெறுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆசிரியர்கள் நியமனம்: அத்துடன், நடுநிலைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாணவியருக்கு தரமான கல்வியை கொடுக்க பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்..
இதைத்தவிர, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் அறிவியல் கணக்கு பாடங்களுக்கு மட்டுமே அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், தமிழ், சமூக அறிவியல் பாடங்களை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை என்று பரவலாக கூறப்படுகிறது.. எனவே, அந்த பாடங்களுக்கான ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதால், இனிமேல் அத்தகைய பாடங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் வகையில், நடுநிலைப் பள்ளிகளில் பணி நியமனங்கள் இருக்கும் என்கிறார்கள்.
நியமனங்கள்: இதற்கு நடுவில், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தகுதியடைந்தவர்களுக்கு மறுபடியும் பணிநியமனத்துக்கான தேர்வை நடத்தாமல், தகுதித் தேர்வின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் கோரிக்கைகள் உள்ளதால், விரைவில் சுமார் 6000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், தகுதித் தேர்வின் அடிப்படையில் மட்டுமே இந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஆக மொத்தம் பள்ளிக்கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றம் விரைவில் வரப்போவதாக சொல்கிறார்கள். இது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை உண்டுபண்ணி வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications