பெரும்பாக்கத்தில் இனி கடினம் .. பள்ளிக்கரணை சதுப்பு நிலம்.. தமிழக அரசுக்கு மிகப்பெரிய உத்தரவு
சென்னை: சென்னையில் ஒரு காலத்தில் சதுப்பு நிலமாக இருந்த பள்ளிக்கரணை, இன்று அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், நெரிசல் மிகுந்த சாலைகளாகவும், ஏராளமான வீடுகளுடன் கூடிய நகரமாகவும் மாறி உள்ளது. தற்போது இருக்கும் நீர் நிலைப்பகுதிகளில் புதிதாக சாலை அமைப்பது, கட்டுமானம் அமைப்பதும் நடப்பதாக புகார்கள் உள்ளது. இது தொடர்பான வழக்கில், பள்ளிக்கரணையில் சதுப்பு நில பகுதியில் கட்டுமானங்களுக்கு ஒப்புதல் வழங்கக்கூடாது என பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டியுள்ள தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், நாவலூர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகள் உள்ளன. இதில் பெரும்பாக்கம் சோழிங்கநல்லூரை ஒட்டியிருக்கிறது. இது சதுப்புநிலத்தை ஒட்டியுள்ள பகுதியாகும். மேலும் பாதி ஊரே சதுப்பு நிலத்தில் தான் இருக்கிறது. இதன் காரணமாக
பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதிகளில் கட்டுமானங்கள் அதிகரித்துவிட்டன.

இந்நிலையில் பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது. இதற்காக பெரும்பாக்கம் சதுப்பு நிலப்பகுதியில் சாலை அமைக்கப்படுகிறது. சதுப்பு நிலங்களை ஒட்டியுள்ள நீர்நிலைகளில், கட்டுமான பொருட்கள், மணல் ஆகியவை கொட்டப்பட்டு வருகிறது.
இதனால் சென்னையின் பள்ளிக்கரணை உள்ளிட்ட சதுப்பு நிலம் அழிக்கப்பட்டு வருவதாக எழுந்த புகாரை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் தென்னிந்திய தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், 'ஆக்கிரமிப்பு, உள்ளிட்ட பல காரணங்களால் சென்னையின் சதுப்பு நிலப்பகுதிகள் மிகவும் சுருங்கி விட்டது. எனவே தற்போது எஞ்சியிருக்கும் சதுப்பு நில பகுதிகளை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். ராம்சர் சதுப்பு நில கணக்கெடுப்பு மற்றும் ராம்சர் தளத்தை பராமரிப்பதற்குத் தேவையான வழிகாட்டுதல்களின் அடிப்படையில், நீர்வளத்துறை, மாநில சதுப்பு நில ஆணையம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இணைந்து, ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்தை உருவாக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டம் இறுதி செய்யப்படும் வரை, தமிழக மாநில சதுப்பு நில ஆணையம் சென்னையின் கடைசியாக எஞ்சியிருக்கும் சதுப்பு நிலத்தின் இப்பகுதியை அறிவியல் ரீதியாக தீர்மானிக்கும் வரை, பள்ளிக்கரணை சதுப்பு நிலம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் எந்த கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் வழங்கக்கூடாது. தமிழக அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திட்ட அனுமதி வழங்குவதை கருத்தில் கொள்ளும்போது, ராம்சர் பகுதிகளை பராமரிக்கும் வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்" இவ்வாறு பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications