தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது "இ-தீர்வு" திட்டம்! இனி எல்லாமே மாறும்! ஆனா.. இது எதுக்குன்னு தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் உள்ள வாராக்கடன்களை வசூலிக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்காக 'இ-தீர்வு' திட்டம் தொடங்கவுள்ளதாக தமிழ்நாடு சட்டசபையில் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் அறிவித்து உள்ளார்.
சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நேற்று பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ரூ. 25.70 கோடி மதிப்பீட்டில் நவீன நெல் சேமிப்புத் தளங்கள். அமைக்கப்படும். திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 18,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய 6 நவீன நெல் சேமிப்புத் தளங்கள் நபார்டு நிதியுதவியுடன் அமைக்கப்படும்

ரூ.15 கோடி மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். நெல் விவசாயிகளின் நலனுக்காகவும், நெல்மணிகளைப் பாதுகாப்பான முறையில் பெற்றிடவும், சேமித்திடவும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், தென்காசி, தேனி, கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 50 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.
முக்கிய அறிவிப்புகள்: ரூ. 85 இலட்சம் மதிப்பீட்டில் பூச்சிதாக்குதல் தடுப்பு பணி அமைக்கப்படும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் உணவுப் பொருட்களைச் சேதப்படுத்தும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மாற்றாக 2000 புறஊதாக்கதிர் விளக்குப் பொறிகள் அமைக்கப்படும்.
இ தீர்வு திட்டம்: தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் உள்ள வாராக்கடன்களை வசூலிக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்காக 'இ-தீர்வு' திட்டம் தொடங்கவுள்ளதாக தமிழ்நாடு சட்டசபையில் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் அறிவித்து உள்ளார்.
7,655 சங்கங்களில் பல்வேறு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ள, கோப்புகள் பராமரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தாவா, விசாரணை உள்ளிட்ட செயல்பாடுகள் இணைய வழி மேற்கொள்ளப்பட்டு சங்கங்களின் வாராக்கடன் குறைக்கும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்படும்.
அசத்தல்: தமிழகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் மின்னணு சான்றிதழ்கள் மிக அதிக அளவில் வழங்கப்பட்டு உள்ளன. வருவாய்த் துறையினை நாடி வரும் பொதுமக்களுக்கு விரைவான சேவையினை அளித்திடும் வகையில், இப்படி மின்னணு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் தேசிய தகவல் மையத்தின் தொழில் நுட்ப உதவியோடு அனைத்து மாவட்டங்களிலும் மின் ஆளுமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதாவது முன்பெல்லாம் ஹார்ட் காப்பி மட்டுமே வழங்கப்பட்டு வந்தன. இதை மாற்ற உள்ளதாக தேர்தலுக்கு பின் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதற்காக கணினிகள் வாங்கப்பட்டன. அரசு துறைகள் முழுக்க கணினியில் மாற்றப்பட்டன. எல்லாம் டிஜிட்டல் மையமாக மாற்றப்பட்டன. முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபின் இதற்கான உத்தரவை கையெழுத்து மூலம் போட்டார்.
இதன் மூலம் அறங்காவல் துறை தகவல்கள் கூட டிஜிட்டலாக மாற்றப்பட்டன. அந்த வகையில்தான் வருவாய் துறையிலும் ஆவணங்கள் டிஜிட்டல் வசமாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் 89.66 லட்சம் மின்னணு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1 கோடி ஆவணங்கள் ஒரு வருடத்திற்கு டிஜிட்டல் முறையில் வழங்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் 12,733 பொது சேவை மையங்கள் e-Distrct (Common Service Centres) வாயிலாக கீழ்காணும் 25 வகையான சான்றுகள் மின்னணு முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு இந்த துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications