தமிழ்நாட்டில் இன்று மேலும் 26 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்... யாருக்கு எந்தப் பணி.. முழு தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 46 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 26 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய பதவிகளுக்கு புதிய ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஜூன் 2ஆம் தேதி 49 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து நேற்று 46 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று மேலும் 26 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு
இது தொடர்பாக உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவில்:
R பொன்னி - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்பி & சுஜித் குமார்- மாநில போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு சிஐடி எஸ்பி
M துரை- போலீஸ் தலைமையக துறை தலைமையக உதவி ஐஜி & G சம்பத்குமார்- சென்னை, போலீஸ் நலத்துறை உதவி ஐஜி
S சாந்தி - மாநில மனித உரிமை ஆணைய எஸ்பி & D மகேஷ்குமார் - மதுவிலக்கு பிரிவு சேலம் மண்டல எஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு போலீஸ் அகாடமி
அதேபோல,
தீபா சத்யன்- சென்னை, ரயில்வே எஸ்பி & P பெருமாள் - சென்னை, அமலாக்கப்பிரிவு எஸ்பி
R சிவக்குமார் - தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்பி & K சுகுமாரன்- கடலோர பாதுகாப்பு அமலாக்கப்பிரிவு எஸ்பி
D சண்முக பிரியா - சைபர் க்ரைம் பிரிவு எஸ்பி & G சுப்புலட்சுமி - குற்ற விசாரணை பிரிவு எஸ்பி
ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு உத்தரவு
D அசோக்குமார்- அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு எஸ்பி & R பாண்டிய ராஜன்- தமிழ்நாடு சிறப்புப் போலீசின் 7ஆவது பட்டாலியன் கமாண்டன்ட்
M பாஸ்கரன்- சிவில் சப்ளை எஸ்பி & M கிங்ஸ்லின்- குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு எஸ்பி
K அதிவீர பாண்டியன்- திருச்சி ரயில்வே எஸ்பி & P K ராதாகிருஷ்ணன் - தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 5வது பட்டாலியன் கமாண்டன்ட்
RK பெத்துவிஜயன் - மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறை எஸ்பி & K குணசேகரன்- நாகை, கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி
ஆக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
M சந்திரசேகரன் - தமிழ்நாடு சிறப்பு போலீஸ் 15வது பட்டாலியன் கமாண்டன்ட் & A தங்கவேலு - சென்னை, பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி
K பழனிக்குமார்- சென்னை, வணிக குற்ற விசாரணை பிரிவு எஸ்பி & K ஸ்டாலின் - சென்னை, சிவில் சப்ளை சிஐடிப்பிரிவு எஸ்பி
T P சுரேஷ் குமார் - சென்னை, தமிழக சிறப்பு போலீஸ் 13வது பட்டாலியன் கமாண்டன்ட் & T செந்தில்குமார் - டில்லி தமிழக சிறப்பு போலீஸ், 8 வது பட்டாலியன் கமாண்டன்ட்
ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications