அரசு ஊழியர்கள் அடிமடியிலேயே கைவைத்த அரசு.. வேலைக்கு வரலைனா சம்பளம் கட்! விவரங்களை சேகரிக்க ஆர்டர்!
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் எனவும், காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023-ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை ரத்து செய்ய வேண்டுமென அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

2021ஆம் ஆண்டு தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் நான்கு ஆண்டுகளாகியும் அது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போதைய நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய அறிவிப்பு இருக்கும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு தொகுப்புரிய காலத்தை பணிக்காலமாக அறிவிப்பது, ஊதிய முரண்பாடுகளை கலைதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் நிதிநிலை அறிவிப்பில் வெளியாகும் என எதிர்பார்த்திருந்தனர். ஏற்கனவே பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததும், ஒரு சில சங்கங்கள் அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு இடம் பெறவில்லை. ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், அது தொடர்பாகவாவது ஏதாவது அறிவிப்பு இருக்கும் என அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதுபோன்ற எந்த அறிவிப்பும் வராதது அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை சரண்டர் செய்து பணப்பலன் பெறுவதற்கான நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் அந்த நடைமுறையும் அடுத்த ஆண்டு முதல் தான் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு அரசு ஊழியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாத கண்டித்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தன.
இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மருத்துவ காரணங்கள் தவிர்த்து வேறு காரணங்களுக்கு விடுப்பு எடுக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது எனவும், இன்று பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது எனவும், மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவர்களின் விவரங்களை சேகரிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications