Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி சொன்னது பொய்யாம்.. குடியரசு தினத்தில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசு தினத்தையொட்டி நடைபெறும் அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாக வதந்தி பரப்பப்படுவதாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பகிர்ந்த தகவலைக் குறிப்பிட்டு, இது வதந்தி என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில், முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவத்தின் அலங்கார ஊர்திகள் இடம்பெறும். அந்தவகையில் 2025 ஜனவரி 26 ஆம் தேதி, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுக்க உள்ளன.

Republic day 2025 Tamil nadu Edappadi palaniswami

அலங்கார ஊர்தி அணிவகுப்பு

ஒவ்வொரு மாநிலங்களும் அலங்கார ஊர்தி மாதிரிகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும். அதனை பரிசீலித்து மத்திய அரசின் தேர்வுக்குழு, அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம்பெறும் மாநிலங்களின் பட்டியலை வெளியிடும். ஒவ்வொரு ஆண்டும் 15 மாநிலங்கள் என்ற வகையில், சுழற்சி முறையில் மத்திய அரசு, இதனை தேர்வு செய்யும்.

அந்தவகையில், எதிர்வரும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தையொட்டி, டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி இடம்பெறாது. கடந்த ஜனவரி 26ல் நடந்த அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு பங்குபெற இயலாது, அடுத்த ஆண்டு மீண்டும் இடம்பெறும்.

குடியரசு தின விழா கொண்டாட்டம்

இந்நிலையில், வரும் ஜனவரி 26ல் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி இடம்பெறாதது குறித்து, தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்

எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "குடியரசு தின விழாவில், தலைநகர் டில்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில் , தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி அதிமுக ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு.

ஆனால் விடியா திமுக அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன். மு.க. ஸ்டாலின் அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும், அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள்." எனத் தெரிவித்தார்.

வதந்தி என தமிழக அரசு மறுப்பு

இந்நிலையில், "குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்று வதந்தி பரப்பப்படுகிறது" என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இதற்கான ஆதாரமாக, மூன்றாண்டுகளுக்கான அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம்பெறும் மாநிலங்களின் பட்டியல் கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டதையும் வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "2025 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில், தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிப்பட்டதாகப் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் தவறான தகவல். 2025ம் ஆண்டு அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி பங்கேற்க இயலாது.

Republic day 2025 Tamil nadu Edappadi palaniswami

சுழற்சி முறையில் தான் தேர்வு செய்யப்படும்

டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்தி பங்கேற்க தேர்வு செய்யப்படும். ஆனால், சுழற்சி முறையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது.

2024 அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி பங்கேற்றது. இனி அடுத்த 2026 ஆண்டு அணிவகுப்பிலே பங்கேற்க இயலும். ஆனால், தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதாகத் தவறான தகவல்கள் பரவி வருகிறது. வதந்தியைப் பரப்பாதீர்!" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+