அடடே..அடிச்சு தூக்குதே தமிழக அரசு..50 ஆயிரம் பேருக்கு மாதம் ரூ.1200! அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல்!
சென்னை: தமிழக அரசின் சார்பில் மகளிர் உதவித் தொகை, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவி தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 50 ஆயிரம் பேருக்கு கூடுதலாக 1200 ரூபாய் மாதம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அறிவித்துள்ளார் தமிழ்நாடு வருவாய்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். யார் யாருக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
தமிழக அரசு சார்பில் தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு மாதம் பல்வேறு வகைகளில் உதவித் தொகைகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை, பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபிற்கான கல்வி உதவித் தொகை, தொழிற்கல்வி உதவித் தொகை, சிறுபான்மையினருக்கான கல்வி உதவித் தொகை ஆகியவை வழங்கப்படுகிறது.

இதேபோல், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, மகளிர் உரிமைத் தொகை, திருமண உதவித் தொகை ஆகியவையும் வழங்கப்படுகிறது.
முதியோர் உதவித் தொகை:
தமிழகத்தில் வயது முதிர்வின் காரணமாக உழைத்து சம்பாதித்து வாழ முடியாமலும் உறவினர்களின் ஆதரவற்ற நிலையிலும், உணவுக்கு வழியில்லாது சிரமப்படும் முதியோர்களின் நலன் கருத்திற்கொண்டு அவர்களுக்கு உதவிடும் நோக்கில் 1.4.1962 முதல் தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டம் ஆரம்பித்த காலத்தில் மாதம் ரூ.20 வீதம் உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில், படிப்படியாக உயர்த்தி தற்போது மாதம் ரூ.1200 வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு:
குறிப்பாக முதியவர்களுக்கு மாதம் 1200 ரூபாய் உதவி தொகையானது வழங்கப்படுகிறது. ரேஷன் கடையில் நான்கு கிலோ அரிசி பொங்கல் மற்றும் தீபாவளிக்கு வேட்டி சேலை ஆகியவற்றோடு, 1200 ரூபாய் உதவி தொகையானது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 60 வயது முதல் 79 வயது வரையிலான முதியோர்களுக்கு 1200 ரூபாயில் மாநில அரசு 80 சதவீத உதவித் தொகையையும் மத்திய அரசு 20 சதவீத உதவித்தொகையை வழங்குகின்றன. 80 வயதுக்கு மேல் இருந்தால் 60% தொகையை மாநில அரசும், 40 சதவீத தொகையை மத்திய அரசும் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உதவித் தொகைகள்:
60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தற்போது சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியவர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினருக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதாவது தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், தேசிய விதவையர் ஓய்வூதிய திட்டம், ஆதரவற்ற விதவையர் ஓய்வூதிய திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதிய திட்டம், 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றுக்கு 2023 வரை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த உதவித்தொகை 1200 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.
அமைச்சர் ராமச்சந்திரன்:
தமிழ்நாடு முழுவதும் 30 லட்சத்து 55 ஆயிரத்து 857 பேர் 2023 நிலவரப்படி உதவி தொகை பெற்று வருகின்றனர். மேலும் 74 ஆயிரத்து 73 பேர் புதிதாக விண்ணப்பித்து காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சரான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்.இது தொடர்பாக நேற்று சட்டப்பேரவையில் பேசிய அவர்," முதியோர் ஓய்வூதியத் தொகை கடந்த ஆண்டு ஜூலை முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டியிருக்கிறார். முதியோர் ஓய்வூதிய தொகை பெறுபவர்கள் மகளிர் உரிமைத்தொகை பெற முடியாது.
முதல்வர் ஸ்டாலின்:
அந்த வகையில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களையும் முதியோர் ஓய்வூதியம் பெறுபவரின் விவரங்களையும் ஆய்வு செய்யும் பணி நடந்ததால் கடந்த ஜூலை மாதம் முதல் முதியோர் உதவித்தொகை வழங்கவில்லை. தற்போது தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதிதாக 50000 பேருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 22 லட்சத்து 59 ஆயிரம் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அந்த வகையில் முதியோர் உதவித் தொகை வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கும் நிச்சயம் வழங்கப்படும்" என உறுதி அளித்திருக்கிறார்.
எப்படி விண்ணப்பிப்பது?:
முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் புதிதாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகலாம். அங்கு அவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும். மேலும் தகுதி வாய்ந்த முதியவர்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரடியாகவே சமர்ப்பிக்கலாம். அப்படி இல்லையெனில் Tamil Nadu e-Governance agency (TNeGA) என்ற இணையதளத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள்:
ஆதரவற்ற முதியோர்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், கணவன் இல்லாமல் இருக்கும் பெண்கள், பிள்ளைகள் இருந்தும் ஆதரவற்ற நிலையில் இருக்கும் பெண்கள், இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். மேலும் யாருடைய ஆதரவும் பாதுகாப்பும் இல்லாத ஆண்களும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.நிரந்தர குடியிருப்பு இல்லாதவர்கள், ஒருவேளை உணவுக்கு அல்லப்படுபவர்கள், யாருடைய பாதுகாப்பும் ஆதரவும் இல்லாதவர்களும் இந்த திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பெண்களும் அதாவது கணவன் மனைவி தனித் தனியே விண்ணப்பிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேவையான ஆவணங்கள்:
ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, வங்கி கணக்கு எண், வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பதற்கான சான்றிதழ், குடும்ப அட்டை,செல்போன் எண் ஆகியவற்றை கொண்டு இ- சேவை மையத்தில் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் மக்களுடன் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு அரசு சார்பாக சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது.
ஆய்வு எப்படி?:
முதியோர் உதவித்தொகை விண்ணப்பித்த உடனே சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து விண்ணப்பம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு தங்களது விசாரணை குறித்த பரிந்துரையை வட்டாட்சியருக்கு வழங்குவார்கள். அதற்குப் பிறகு இந்த உதவி தொகை என்பது வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம்












Click it and Unblock the Notifications