சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நெல் பயிர் காப்பீடு.. பிப். 15ஆம் தேதி கடைசி நாள்! தமிழக அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வரும் பிப்.15ஆம் தேதிக்குள் பயிர்களைக் காப்பீடு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீட்டு செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே இத்திட்டத்தின் கீழ் வரும் பிப்.15ஆம் தேதிக்குள் பயிர்களைக் காப்பீடு செய்யத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இகு தொடர்பாகத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2021 - 2022 ஆம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது குளிர் கால பருவ (ராபி) பயிர்களான நவரை மற்றும் கோடை நெல், நெல் தரிசில் உளுந்து, நெல் தரிசில் பச்சை பயிறு, நெல் தரிசில் பருத்தி, எள், நிலக்கடலை, மக்காச்சோளம், ஆகிய பயிர்கள் காப்பீட்டு செய்யப்பட்டு வருகின்றன.

Tamil Nadu govt orders to take Crop Insurance before February 15

இதில், டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறையில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் நெல் தரிசில் பயிறு வகைகளை விவசாயிகள் காப்பீடு செய்து வருகின்றனர்.

இப்பயிர்களைக் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி பிப்ரவரி 15 ஆம் தேதி அன்று முடிவடையும் நிலையில், நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குப் பின்னர் இப்பயிர்களை சாகுபடி செய்ய உத்தேசிக்கும் விவசாயிகள் திட்ட விதிமுறைகளின்படி கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கலுக்குப் பதிலாக "விதைப்பு சான்றிதழ்" பெற்று பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் பயிர்களைக் காப்பீடு செய்து பயனடையுமாறு விவசாயிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கேட்டுக் கொள்கிறது.

தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா பட்டன்,விவிபேட் இடம்பெறாது தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா பட்டன்,விவிபேட் இடம்பெறாது

English summary
Tamilnadu govt annoucement on Crop Insurance: Crop Insurance latest news in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X