ஜெருசலேம் புனித யாத்திரை செல்லும் கன்னியாஸ்திரிகளுக்கு நிதியுதவி ரூ.60,000ஆக உயர்வு
சென்னை: கிறிஸ்துவர்களின் புனிதத் தலமான ஜெருசலேம் செல்லும் அருட்சகோதரர்கள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ 37,000இல் இருந்து, ரூ 60,000ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் கிறிஸ்துவர்களின் புனிதத் தலமான ஜெருசலேத்திற்கு புனித பயணம் செல்லும் அருட்சகோதரர்கள், கன்னியாஸ்திரிகளுக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2020க்கு முன்பு வரை ஜெருசலேம் செல்லும் அருட்சகோதரர்கள், கன்னியாஸ்திரிகளுக்கு ரூ.20,000 நிதியுதவி அளிக்கப்பட்டு வந்தது. 2020-21-ஆம் ஆண்டில் இந்த நிதியுதவி ரூ.20,000இல் இருந்து ரூ.37,000 ஆக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது, சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் மஸ்தான் வெளியிட்டார். கிறிஸ்துவர்களின் புனிதத் தலமான ஜெருசேலம் செல்ல அளிக்கப்படும் நிதியுதவி உயர்த்தி வழங்கப்படும் என அவர் அறிவித்தார்,
சட்டசபையில் பேசிய அமைச்சர் மஸ்தான், கிறிஸ்துவர்களின் புனிதத் தலமான ஜெருசேலம் செல்லும் அருட்சகோதரர்கள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி ரூ.37 ஆயிரத்திலிருந்து 60 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரின் உத்தரவைச் செயல்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஜெருசேலம் செல்லும் அருட்சகோதரர்கள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி ரூ 60 ஆயிரமாக உயர்த்தியும், அதற்காக ரூ.11.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications