தமிழகத்தை ஆக்கிரமிக்க போகும் வானுயர்ந்த கட்டிடங்கள்.. அரசு எடுத்த மேஜர் முடிவு.. இது சூப்பர்ல
சென்னை: தமிழ்நாட்டில் தொழில்துறை முதலீடுகளை ஈர்க்கவும் வளர்ச்சியை உறுதி செய்யவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இப்போது தொழிற்துறையின் நீண்ட காலமாகக் கோரிக்கை வைத்த ஒரு விஷயத்தில் மிக முக்கியமான ஒரு முடிவைத் தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. இதனால் நாம் மாநிலத்தில் ஏகப்பட்ட வானுயர்ந்த கட்டிடங்களைப் பார்க்க முடியும்.
தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலீட்டாளர்கள் மாநாடு, வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் முதலீடுகளை ஈர்த்து வருகிறது.

முதலீடு ஈர்ப்பது ஒரு பக்கம் என்றால் தொழில்துறையினர் எளிதாகத் தொழில் தொடங்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொழில்துறையினருக்கு இருக்கும் சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றைச் சரி செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
மேஜர் முடிவு: இதற்கிடையே மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் மிக முக்கியமான ஒரு முடிவைத் தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. அதாவது தொழில் பயன்பாட்டிற்காகக் கட்டப்படும் உயரமான கட்டிடங்களுக்கான உயரக் கட்டுப்பாட்டை நீக்கப்பட்டுள்ளது. இதற்காக TNCDBR எனப்படும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் தேவையான திருத்தங்களைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.
அதன்படி இந்திய விமான நிலைய ஆணையத்தின் அனுமதிக்கு உட்பட்டு, 4000 சதுர மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட ப்ளாட்டில் குறைந்தபட்ச அகலம் 30 மீட்டர் இருக்கும் கட்டுமானத்திற்கு எந்தவொரு உயரக்கட்டுப்பாடும் விதிக்கப்படாது என்று விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
திருத்தம்: மாநிலம் முழுவதும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான வகையில் உயரமான கட்டுமானத்தை மேற்கொள்ள அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கடந்த வாரம் தான் அறிவிப்பு வெளியான நிலையில், இந்த வாரமே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இப்போது மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களின்படி வணிக கட்டிடங்கள் எந்த உயரத்திற்கு வேண்டுமானாலும் கட்டலாம்.
எதற்காக: TNCBR 2019இன் விதி 39 என்பது 18.3 மீட்டருக்கு மேல் உயரமான கட்டிடங்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. இருப்பினும், அதில் அந்த கட்டிடங்கள் வீட்டுவசதி, பள்ளிகள் அல்லது தொழிற்சாலை என எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு இல்லாமல் இருந்த நிலையில், இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இந்த புதிய திருத்தத்தின் மூலம், இனி உயரமான கட்டிடங்களை தொழில்துறை தேவைகளுக்காக பயன்படுத்தலாம். இந்த திருத்தம் தொழிற்சாலைகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 12 மீட்டர் அகலம் கொண்ட 3,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதியில் வணிகக் கட்டிடத்திற்கான புளோர் ஸ்பேஸிங் இன்டெக்ஸ் 3.25ஆக இருந்த நிலையில், இப்போது அது 6.075ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல தொழில்துறை பூங்காக்களில், குறைந்தபட்சம் 12 மீட்டர் அகலம் கொண்ட இடத்தில் புளோர் ஸ்பேஸிங் இன்டெக்ஸ் 3.25 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications