சென்னை கோயம்பேட்டில் ஸ்கைவாக்.. அதுவும் இந்த இடத்திலேயா.. பயணிகளுக்கு விரைவில் பெரிய நிம்மதி
சென்னை: சென்னை கோயம்பேடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புதிய ஸ்கைவாக் அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. ஜவஹர்லால் நேரு சாலை - பூந்தமல்லி சாலை இடையே ரூ.18 கோடியில் இந்த ஸ்கைவாக் அமைய உள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நகரின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் மேம்பாலங்கள் அமைப்பது, யூ டேர்ன் பாலங்கள் அமைப்பது என பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

அதுபோக போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் நடை மேம்பாலங்களும் அமைக்கப்படுகின்றன. ஸ்கை வாக் எனப்படும் ஆகாய நடை மேம்பாலங்களும் நெரிசல் மிகுந்த இடங்களில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயணிகள் சாலையை எளிதில் கடக்க முடிகிறது. தி.நகர் ஸ்கைவாக் கட்டிய பிறகு தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து ரயில்வே நிலையத்திற்கு எந்த சிரமும் இன்றி பயணிகள் சென்று வர முடிகிறது.
முன்பெல்லாம் தி.நகர் கூட்ட நெரிசலில் சிக்கி வியர்க்க விறுவிறுக்க நடந்த சூழலில் கடந்த 2003 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட நடை மேம்பாலம் மூலம் பயணிகள் எளிதாக சென்று வர முடிகிறது. இந்த நிலையில் தான் சென்னையின் மற்றொரு மிக முக்கியமான பகுதியாக விளங்கும் கோயம்பேட்டில் ஸ்கை வாக் அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.
ஜவர்ஹர்லால் நேரு சாலை - பூந்தமல்லி சாலை இடையே ரூ. 18 கோடி செலவில் இந்த ஸ்கைவாக் அமைக்கப்பட உள்ளது. இந்த ஸ்கை வாக் மூலம் தேமுதிக அலுவலகம் அமைந்துள்ள சத்திரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து எம்.டிசி பேருந்து நிறுத்தம் இணைக்கப்பட உள்ளது. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருப்பது போன்று இருபுறமும் தானியங்கி லிப்ட் வசதிகளுடன் ஸ்கைவாக் அமைக்கப்பட உள்ளது.
இந்த ஸ்கை வாக் பயன்பாட்டுற்கு வந்த பிறகு சாலையை சிரமம் இன்றி கடந்து செல்ல முடியும் என்று பயணிகள் தெரிவித்துள்ளனர். சென்னை கோயம்பேட்டில் காலை மற்றும் மாலை வேளைகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். எனவே நெருக்கடியான இந்த இடத்தில் ஸ்கைவாக் அமைக்கும் முடிவுக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள். அதேவேளையில் ஸ்கைவாக் கட்டுமான பணிகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்பது வாகன ஓட்டிகள் முன்வைக்கும் கருத்தாக உள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications