போனா திரும்பாது..ஆனி மாத கடைசி முகூர்த்தம்! இன்னைக்கு ரெஜிஸ்ட்ரேஷன் பண்றீங்களா? சூப்பர் அறிவிப்பு..!
சென்னை: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான இன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பத்திரப் பதிவுத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும், அவற்றை முகூர்த்த தினங்களில் செய்வது வழக்கம். அந்த வகையில், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகள் வீடு, நிலம், வாகனம் உள்ளிட்டவற்றை வாங்க நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து மக்கள் வாங்குகின்றனர்.

குறிப்பாக அசையா சொத்துக்களான வீடு மற்றும் நிலம் வாங்க சுப முகூர்த்த தினங்களில் மட்டுமே மக்கள் விரும்புகிறார்கள். இதன் காரணமாக பத்திரப்பதிவு அலுவலகங்களில் அதிக அளவில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படும்.
இதனால் பலரும் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அவதி அடைந்தனர். இதனை தவிர்க்கும் வகையில் பத்திரப்பதிவு செய்வதற்காக பல சிறப்பு வசதிகளை தமிழக பத்திர பதிவுத்துறை அறிவித்து வருகிறது. இந்த மாதம் கூட முதல் ஆனி முகூர்த்தத்தில் அதிக அளவு பத்திரப்பதிவு செய்தது. இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு கூடுதலாக வருவாய் கிடைத்தது. இந்த நிலையில் தற்போது ஆடி மாதம் வரவிருக்கும் நிலையில் ஆனி மாத கடைசி முகூர்த்தம் இன்று வருகிறது. இதன் காரணமாக ஏராளமானோர் பத்திரப்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கூட்ட நெரிசல் மற்றும் மக்கள் ஏமாற்றம் அடைவதை தடுக்க கூடுதலாக டோக்கன்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான இன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பத்திரப் பதிவுத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தற்போது ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான 12.07.2024 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
எனவே, ஆனி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான 12.07.2024 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகள் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது." என கூறப்பட்டுள்ளது.
இதனால் பத்திரப் பதிவு செய்ய வரும் மக்கள் சிரமமின்றியும், கூட்ட நெரிசல் இன்றியும் பத்திரப் பதிவு செய்யலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் சுப முகூர்த்த தினமான இன்றும் கூடுதல் பத்திரப் பதிவு இருக்கும் என்பதால், அதிக அளவில் அரசுக்கு வருவாய் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூடுதல் பணி நேரம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
-
கிப்ட் பத்திரம் பதிவில் "நோ கேஷ்" கண்டிஷன் தெரியுமா? ஒரே ஒரு தப்பு பண்ணா மொத்த ஆவணமும் டோட்டலா காலி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications