பத்திர பதிவில் அடுத்தடுத்து.. மாற்றம் வந்ததே கவனிச்சீங்களா.. இப்போ பாருங்க என்ன ஆச்சுன்னு.. சூப்பர்!
சென்னை: தமிழ்நாட்டில் பத்திர பதிவுத்துறையில் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்கள் கடந்த சில மாதங்களாக செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு பத்திர பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சீர்திருத்தங்களின் விளைவாக இத்துறையின் மூலம் அரசுக்கு வரும் வருமானம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கான பதிவு வசதிகளை மேம்படுத்துதல், போலி பத்திர பதிவுகளைத் தடுக்கும் பல்வேறு முறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களுக்கு பதிவு துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்துதல் மற்றும் வருமான சிதறல்களை ஒழுங்குபடுத்தி அரசின் கருவூலத்திற்கு வர வேண்டிய இனங்களை விடுதல் இன்றி வர வைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக பத்திர பதிவுத்துறை வருவாய் வசூலில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. இல்லாத அளவில் 17,253 கடந்த நிதி ஆண்டில் இதுவரை கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.
கடந்த ஆண்டில் ஜூலை மாத முடிவு வரை வசூலிக்கப்பட்ட மொத்த வருவாயைவிட நடப்பு ஆண்டின் ஜூலை மாத முடிவில் அதிக வருவாய் வசூலிக்கப்பட்டு பதிவுத்துறை நடப்பு நிதியாண்டிலும் சாதனை படைத்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் 31.07.2022 வரை வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூபாய் 5539.06 கோடி ஆகும்.
நடப்பு ஆண்டில் நேற்று வரை அதாவது 31.07.2023 வரை பத்திர பதிவுத்துறையில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூபாய் 5611.47 கோடி ரூபாய் ஆகும். இவ்வகையில் வரலாற்று சாதனை படைக்கப்பட்டதாக கருதப்பட்ட கடந்த ஆண்டு சாதனையைவிட நடப்பு ஆண்டில் நடப்பு மாதத்தில் பத்திர பதிவுத்துறை அதிக வருவாய் ஈட்டி கடந்த ஆண்டு சாதனையைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, என்று தமிழ்நாடு அரசு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மாற்றம்: தமிழ்நாட்டில் பத்திர பதிவுத்துறையில் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்கள் கடந்த சில மாதங்களாக செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பத்திர பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் மாற்றப்பட்டு உள்ளன. எந்தெந்த சேவை கட்டணங்கள் மாற்றப்பட்டு உள்ளன என்று இங்கே பார்க்கலாம்.
பத்திர பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. பல்வேறு துறைகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டாலும் பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் மட்டும் மாற்றப்படாமலே இருந்தது. இந்த நிலையில்தான் பத்திர பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல் ஆகிய பணிகளுக்கு கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோல் மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பதிவுச்சட்டம், 1908-இன் பிரிவு 78-இல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும் சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரை கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இந்த 20 இனங்களுக்கும் சேவைகளின் அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
அதன்படி ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20/-லிருந்து ரூ.200/- என கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூ.4,000/-லிருந்து ரூ.10,000/- என கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications