தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் டிசம்பர் 9ல் கூடுகிறது.. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவெடுக்கும் என தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை, 2024-ஆம் ஆண்டு, டிசம்பர் 9-ஆம் நாள், திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் கூட்டியுள்ளார் என முதன்மைச் செயலர் கி.சீனிவாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி கூடியது. முதல் நாளில் மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு அவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. ஜூன் 21 ஆம் தேதியில் இருந்து அரசுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏக்களின் விவாதம், அமைச்சர்களின் பதிலுரை, 55 மானியக் கோரிக்கை மீது வாக்கெடுப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜூன் 29 ஆம் தேதி வரை 9 நாட்கள் காலையிலும், மாலையிலும் சட்டப்பேரவை கூடியது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக சட்டசபையில் அதிமுகவினர் அமளி செய்ததை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க.வினர் நீக்கி வைக்கப்பட்து கூட்டத்தொடர் என்றில்லாமல், கூட்டம் என்று மாற்றிக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறினார். அதைத்தொடர்ந்து, அந்த தீர்மானம் நிறைவேறியது.
இந்நிலையில், அடுத்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி கூட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக்குழு முடிவெடுத்து அறிவிக்கும்.
சட்டசபை கூட்டத்தொடர் நடத்தப்படும் நாட்கள் குறித்து, அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய அலுவல் குழு ஆய்வு கூட்டம் முடிவு செய்யும். சட்டசபை கூட்டத்தொடரை முழுமையாக நேரலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளதாக குற்றம்சாட்டி வரும் நிலையில், அது தொடர்பாக சட்டசபையில் குரல் எழுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே வரும் கூட்டத்தொடர் கடுமையான விவாதங்களுடன் காரசாரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications