தங்கம் தரப்போகும் லட்டு.. பல லட்சம் பேருக்கு சர்ப்ரைஸ்.. தமிழக பட்ஜெட்டில் அந்த அறிவிப்பு வருதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில் புதிய பணி நியமனங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

வரும் 14ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடுகிறது. பட்ஜெட்டில் துறை சார்ந்த திட்டங்கள் குறித்தும், புதிய அறிவிப்புகள் தொடர்பாகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக போக்குவரத்துக் கழகங்களில் புதிய பணியாளா்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். போக்குவரத்து கழகத்தில் தனியார் ஒப்பந்தத்தின் பெயரில் புதிய ஊழியர்கள் நியமனம் செய்வது தொடர்பாக பட்ஜெட் தொடரில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் புதிய பேருந்து நிலையங்கள் அமைப்பது தொடர்பாகவும், திருச்சி மெட்ரோ நிலையம் அமைப்பது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.

எண்ணிக்கை உயரும்

சென்னையில் கட்டணமில்லா பேருந்து சேவையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாநகரப் பேருந்துகளில் பெண் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Tamil Nadu may give new jobs to lakhs of people in the new budget 2025-26

தேவை அதிகரித்து வருவதால் சேவையை அதிகரிக்க போக்குவரத்துக்கழகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு முழுக்க பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர், திருநங்கையர் உட்பட அனைத்து மகளிரும் தமிழ்நாடு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி 2021 ஆம் ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், அரசு பேருந்துகளில் (மாநகரப் பேருந்துகள் மற்றும் நகரப் பேருந்துகள்) பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணம் செய்யலாம். பெண்கள் கல்வி, வேலை மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளுக்கு சுதந்திரமாக பயணிக்க உதவுதல். குடும்பச் செலவை குறைத்து பெண்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல். பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதல். இந்தத் திட்டம் பெண்கள் மற்றும் பிற பயனாளிகளுக்கு அதிகளவில் பயனளிக்கின்றது. தமிழக அரசின் சமூக நல திட்டங்களில் முக்கியமான திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த திட்டத்தைதான் தற்போது விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.


குத்தம்பாக்கம்

427 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பூந்தமல்லியில் இருந்து இயங்கி வரும் பேருந்துகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளன. சென்னையில் உள்ளூர் அளவிலான இணைப்பை மேம்படுத்த பூந்தமல்லி பேருந்து மையம் குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.

MTC பூந்தமல்லியில் இருந்து குத்தம்பாக்கத்திற்கு 150 பேருந்துகளை மாற்றி இணைப்பை மேம்படுத்தும். பூந்தமல்லி டெப்போவில் 120 மின்சார பேருந்துகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

முதல் கட்டமாக பெங்களூர், தர்மபுரி மற்றும் தமிழ்நாட்டின் மற்ற வடக்கு பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் திருமழிசை அருகே குத்தம்பாக்கத்திற்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு வரவிருக்கும் பேருந்து நிலையங்களில் மற்ற அரசின் பயன்படுத்தாத வாகனங்களை நிறுத்துவதற்கும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) முடிவு செய்துள்ளது.

முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான தனி பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் அடுத்த மாதம் 3ம் வாரம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான தனி பேருந்து நிலையம் கட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிந்த நிலையில் கடைசி கட்ட சீரமைப்புகள் நடக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+